உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மே.வங்கத்தில் யாத்திரையின் போது ராகுல் கார் மீது தாக்குதலா?: காங்., மறுப்பு

மே.வங்கத்தில் யாத்திரையின் போது ராகுல் கார் மீது தாக்குதலா?: காங்., மறுப்பு

கோல்கட்டா: மேற்குவங்க மாநிலம் மால்டாவில் காங்கிரஸ் எம்.பி ராகுல் யாத்திரை மேற்கொண்டிருந்த போது, கார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. காரின் கண்ணாடிகள் சேதம் அடைந்தன என செய்திகள் வெளியாகியது. மேற்கு வங்கத்தில் ராகுலின் காரின் மீது தாக்குதல் நடத்தப்பட வில்லை என தமிழக காங்கிரஸ் சமூகவலைதளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.லோக்சபா தேர்தலையொட்டி, மணிப்பூர் முதல் மும்பை வரையிலான இரண்டாம் கட்ட 'பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை'யை காங்கிரஸ் எம்.பி., ராகுல் கடந்த ஜன.,14ம் தேதி மணிப்பூரில் துவக்கினார். மேற்குவங்க மாநிலம் மால்டாவில் இன்று (ஜன.,31) யாத்திரை மேற்கொண்டிருந்த போது ராகுலின் கார் மீது கல் வீசி தாக்குதல் நடந்தப்பட்டது. காரின் கண்ணாடிகள் சேதமடைந்தன என செய்திகள் வெளியானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b5is1nyk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மறுப்பு

இது குறித்து தமிழக காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் ராகுலை சந்திக்க ஏராளமானோர் குவிந்தனர். இந்த கூட்டத்தில், ஒரு பெண் திடீரென ராகுலின் கார் முன் அவரை சந்திக்க வந்தார். இதனால் திடீரென பிரேக் போடப்பட்டது. அப்போது பாதுகாப்பு வட்டத்தில் பயன்படுத்தப்பட்ட கயிற்றால் காரின் கண்ணாடி உடைந்தது.மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராக ராகுல் நீதி கேட்டுப் போராடி வருகிறார். பொதுமக்கள் அவருடன் உள்ளனர். பொதுமக்கள் அவருக்குப் பாதுகாப்பாக உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறைபாடு

இது குறித்து மேற்கு காங்கிரஸ் தலைவர்கள் கூறுகையில், ‛‛ மேற்கு வங்கத்தில் திரண்டிருந்த மக்கள் கூட்டம், ராகுலின் காரின் கண்ணாடி உடைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. பாதுகாப்பு குறைபாடு தான் இதற்குக் காரணம்'' என கூறினர்.

சவுத்ரி கேள்வி

இது குறித்து காங்கிரஸ் எம்.பி., ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியதாவது: மணிப்பூர் மற்றும் அசாமில் யாத்திரைக்கு இடையூறுகள் ஏற்படும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் மேற்கு வங்கத்தில் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் கட்சியினர் ராகுலை வரவேற்று பேனர்கள் வைத்து இருந்தனர். அதனை கிழித்தெறிந்தது யார்?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

ராஜா
பிப் 01, 2024 04:59

இதுவே பாஜக ஆளும் மாநிலத்தில் நடந்து இருந்தால்..?


Godfather_Senior
ஜன 31, 2024 19:51

2024 தேர்தலில் பூஜ்யம் சீட்டுக்கு அடித்தளம் போட்டாச்சு


Indian
ஜன 31, 2024 18:30

கலவரம் செய்வதற்கே ஒரு கூட்டம் இந்தியாவில் இருக்கு, அதன் முடிவு காலம் இந்தியாவிற்கு விடிவு காலம்


Duruvesan
ஜன 31, 2024 17:43

ஒரே கட்சி மூணு விதமான அறிக்கை எவனும் உங்கள சேர்த்துக்க மாட்டான்


Anand
ஜன 31, 2024 17:20

அடி வாங்கினாலும் வெளியில் சொல்லமாட்டோம், மூச் விடமாட்டோம்..... தீதி அக்கா இப்பவாவது எங்களின் பொறுமையை உணர்ந்து ஒரு ஐந்து சீட்டாவது யாசகம் வழங்குமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.


Mohan
ஜன 31, 2024 15:51

இதெல்லாம் தீதியின் திருவிளையாடல் ....ஹ ஹ ஹ ...


Sathyam
ஜன 31, 2024 18:53

மிகவும் சரி இது தான் கர்மா இதுவும் வேணும் இன்னமும் வேணும் இந்த கோமாளிக்கு இதெல்லாம் தேவை தான் , ஒர்ஸ்ட் ஆப் லக் காங்கிரெஸ் இறுதி சடங்கு உறுதி


N SASIKUMAR YADHAV
ஜன 31, 2024 15:50

ஓட்டுக்கு இரண்டு களவானிகளும் பங்கு போட்டால் இப்படித்தான் நடக்கும்


Palanisamy Sekar
ஜன 31, 2024 15:48

INDIA கூட்டணியின் பிளவு இந்த அளவுக்கு போகுமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. ராகுலின் நிலைமை படுமோசம். மம்தா அரக்கிபோல நடந்துகொள்வதும் கண்டிக்கத்தக்கது. ராகுலுக்கு வேண்டாத வேலை இந்த பேரணி ஊரணியெல்லாம். தாய்லாந்து சுற்றுலாவுக்கு அனுப்பிவைத்து அவரை குஷிப்படுத்த காங்கிரஸ் தலைமை முன்வரவேண்டும்..


தமிழ்வேள்
ஜன 31, 2024 15:10

மம்தா பேகத்தின் கைங்கரியம் ....ரொஹிங்கியாக்களை /பங்களாதேஷி அகதிகளை உள்ளே விட்டபோதே இந்த கான் கிராஸ் கும்பல் அதை எதிர்க்காமல் , பாஜக வுக்கு எதிராக அரசியல் செய்ய பயன்படுத்தியன் விளைவு ....இனி கல் மட்டுமல்ல வெடி குண்டுகள் கூட வீசப்படலாம் ...சேராத இடந்தனிலே சேரவேண்டாம் - என்பதன் பொருள் இப்போதாவது புரிகிறதா கான் கிராஸ் பேமானிகளே ?


Duruvesan
ஜன 31, 2024 15:08

மம தா அப்பவே சொல்லிச்சி நாங்க கலந்துக்க மாட்டோம்னு. மார்க்கம் அமைதி


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ