உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நட்டநடு வயலில் ஒரு தொங்கல் பாலம்...! ஜீனியஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் கலெக்டர்

நட்டநடு வயலில் ஒரு தொங்கல் பாலம்...! ஜீனியஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் கலெக்டர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா; பீகார் மாநிலத்தில் வயலின் நடுவில் 35 அடி நீளத்துக்கு இணைப்பு சாலைகள் இன்றி பாலத்தை மட்டுமே அதிகாரிகள் கட்டிய வினோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கிராம சாலைகள் திட்டம்

வடமாநிலங்களில் ஒன்றான பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் தான் இப்படிப்பட்ட கூத்து நிகழ்ந்திருக்கிறது. ராணிகஞ்ச் என்ற ஊரில் 2.5 கி.மீ., தொலைவுக்கு பரமாந்தபூர் கிராம் வரை முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால், அதற்கான நிலம் ஆர்ஜிதம் முழுமை பெறவில்லை.

நடுவயலில் அரைகுறை பாலம்

அதற்கு முன்பாகவே பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி இருக்கின்றன. பாலத்தின் நடுப்பகுதி மட்டுமே கட்டப்பட, அதன் இருபுறமும் இருக்க வேண்டிய இணைப்பு சாலைகள் இல்லை. நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே அதிகாரிகள் பாலத்தை கட்டிவிட்டு, மற்ற பகுதிகளில் பணிகளை முடிக்காமல் உள்ளனர் என்று ஊர் மக்கள் குரல் எழுப்ப அதன் பின்னரே விஷயம் வெளியில் வர ஆரம்பித்து இருக்கிறது.

நிலம் கையகப்படுத்துதல்

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளில் சிலர் கூறி உள்ளதாவது; நிலம் கையகப்படுத்துதல் முழுமை அடைந்த பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

குழப்பம்

விவசாயி க்ரித்யானந்த் மண்டல் என்பவர் கூறுகையில், இந்த பாலம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. வேறு ஏதேனும் பெரிய திட்டத்துக்காக கட்டுமானப் பணிகள் நடப்பவதாக தான் நாங்கள் நினைத்தோம். ஒரு கட்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் குழப்பம் நிலவியதால் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தோம் என்றனர்.

அறிக்கை

விவசாயிகளின் தகவலை அடுத்து அராரியா மாவட்ட ஆட்சியர் இனாயத் கான் விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதோடு, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mani . V
ஆக 08, 2024 04:32

இந்தியா முழுவதும் திராவிட மாடல் விஷம் போல் பரவி வருகிறதோ?


Training Coordinator
ஆக 08, 2024 09:05

Mani.V பீஹாரில் பாஜக கூட்டணி அரசு நடக்கிறது. மஞ்சள் காமாலை காரன் கண்ணுக்கு எல்லாம் மஞ்சளாக தெரியும். பாஜகவிற்கு ஓட்டு போடும் அதிபுத்திசாலிகள் வாழும் மாநிலங்களின் நிலைமை இதுதான்.


Arivalakan
ஆக 07, 2024 16:33

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியிலிருந்து குடவாசல் செல்லும் பாதையிலும் இதே போல நடுவில் பாலமும் சுற்றிலும் விவசாயநிலமும் உள்ளது


Chennaivaasi
ஆக 07, 2024 11:56

இங்கே காஞ்சிபுரம் அருகில் வாலாஜாபாத் முன்பாக இது போன்ற பெரிய பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது, ஒரு சாலை இணைப்பும் இல்லாமல். அது போல திருத்துறைப்பூண்டி வேளாங்கண்ணி இணைப்பு ரயில்வே பாதையில், ரயில்வே பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு, ரயில் பாதை இல்லாமல், சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த படுகின்றது


Ramesh Sargam
ஆக 07, 2024 11:51

அங்கேயாவது நட்டநடு வயலில் ஒரு தொங்கு பாலம். தமிழகத்தில் அதுவும் இல்லாமல் பலகோடிகளை சுருட்டி இருக்கிறார்கள். இனியும் சுருட்டுவார்கள். பீகார் அதிகாரிகள், தமிழக அதிகாரிகளிடம் பயிற்சி எடுக்கவேண்டும்.


Saravana Kumar
ஆக 07, 2024 12:06

எந்த ஊர் நியூஸா இருந்தாலும் திமுக இழுக்குறிங்களே... வாங்குன காசுக்கு மேலேயே கூவுறீங்களோ ஆனா அதுக்கும் மேலேயே கூறுகிறீர்களே


Pandi Muni
ஆக 07, 2024 14:39

ஆமா இங்கிருந்த 80 அடி அகல 300 அடி நீள பாலத்த காணோம்


பாமரன்
ஆக 07, 2024 11:42

இது எல்லா மாநிலங்களிலும் நடக்கும் கூத்துதான்... நம்ம அப்ரசண்டிகளுக்காக தமிழ்நாட்டில் நடந்த... அதுவும் தருமமிகு சென்னையில் நடந்த கூத்துக்கள்...கிட்டத்தட்ட இருபது வருடங்கள் முன் பல்லாவரம் ரயில் நிலையம் அருகில் உள்ள பாலத்தில் ரோடு பக்கம் மாநில நெடுஞ்சாலை துறையும் ரயில் பாதைகள் மேல் ரயில்வே துறையும் பாலம் கட்டுவதாக ஒப்பந்தம்... ஆச்சர்யமாக மாநில அரசின் பணியை முடிச்சிட்டு பெயின்டிங் கூட செஞ்சிட்டு கிளம்பிட்டாங்க... ஆனால் ரயில் பாதைகள் மேலே காலியா பல வருடங்கள் கிடந்தது... ஒரு இரவில் செம்ம மூடில் இருந்த பைக் ராத்திரியில் அந்த பாலத்தின் மேலே ஏறி ரயில்வே ட்ராக்கில் லேண்ட் ஆகி பெரிய செய்தியா ஆனபின் அவசர அவசரமாக மிச்சத்தை கட்டி முடிச்சு தொறந்து விட்டாங்க... அதேபோல தில்லைகங்கா நகர் சப்வே பகுதியில் ரயில்வே பகுதி வெகுகாலம் முன்பே கட்டப்பட்டாலும் நெடுஞ்சாலை துறை நில கையகப்படுத்துதல் பிரச்சினையால் பல வருடங்கள் பணியை முடிக்க முடியலை... அந்த பாலம் அருகேதான் என் வீடு இருந்தது... ஸ்டேஷன் இல்லாத இடத்தில் இந்த பணி காரணமா ரயில் நின்று போக நான் அங்கெ இறங்கி சில வருடங்கள் பயனடைஞ்சேன்... சோ இது இந்தியா... மேரே பாரத் மஹான்... ஜெய் ஹோ...


Ravi
ஆக 07, 2024 11:23

இப்படியெல்லாம் பணம் வேஸ்ட் செய்யும் பீகார்ருக்கு வருட வருடம் மத்திய அரசு அதிக பணம் ஒதுக்குவதக்கு எந்த கட்டுப்படும் இல்லையா


ஆரூர் ரங்
ஆக 07, 2024 11:12

ஆற்றை யாராவது உ.பி ஆட்டையை போடும் முன் பாலத்தைக் கட்டி பாதுகாத்தது பாராட்டுக்குரியது.


கனோஜ் ஆங்ரே
ஆக 07, 2024 13:00

தமிழ்நாட்டுக்காரனை பத்தி கழுவி ஊத்தி... குறை சொல்றியே ... இந்திக்காரனுங்க பாரு எவ்வளவு ஊழல் பண்ணி இருக்கானுங்க... இதைப் பத்தி வாய தொறக்காம... உ.பி..ய பத்தி பேசியிருக்கிற... உனக்கு அந்தளவுக்கு எரிச்சல் உன் உள்ளத்துல மண்டிகிடக்கு...? உன் வாழ்க்கையில ஏதோ நடந்திருக்கு..


Anand
ஆக 07, 2024 14:02

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் ஒரு ரயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாக இப்படித்தான் உள்ளது.


M Ramachandran
ஆக 07, 2024 11:05

பிரசாத் கம்பெனி அடாவடியாகா புடுங்கிய நிலத்திற்கு பாசனத்திற்கு கங்கைய்ய நீர் திருப்பா


Velan Iyengaar
ஆக 07, 2024 10:26

கூட்டணி ஆட்சிய தக்கவைத்துக்கொள்ள ஒன்றியம் இந்த மாதிரி வேலைகளை செய்ய எக்கச்சக்கமா நிதி ஒதுக்கும் செயலை செய்து உள்ளது .....


Apposthalan samlin
ஆக 07, 2024 10:26

மொத ரோடு பாடத்துக்கு aataya போட்டு இருப்பார்களோ


மேலும் செய்திகள்