உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.ஏ.ஏ.,வால் விமோசனம்: 40 ஆண்டு கால போராட்டங்களுக்கு பின் பீஹார் பெண்ணுக்கு குடியுரிமை கிடைத்தது

சி.ஏ.ஏ.,வால் விமோசனம்: 40 ஆண்டு கால போராட்டங்களுக்கு பின் பீஹார் பெண்ணுக்கு குடியுரிமை கிடைத்தது

பாட்னா: பீஹாரில் பிறந்து வங்கதேசத்துக்கு சென்று திரும்பிய பெண்ணுக்கு, 40 ஆண்டு கால போராட்டங்களுக்குப் பின், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் வாயிலாக இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது.பீஹாரின் ஆராவைச் சேர்ந்தவர் சுமித்ரா பிரசாத் என்ற ராணி சாஹா என்பவர், 5 வயதில் தன் அத்தையுடன், கிழக்கு பாகிஸ்தானுக்கு கடந்த 1970ல் சென்றார்.

மளிகை கடை

அது பின்னர், வங்கதேசம் என்ற தனி நாடானது. கடந்த 1985ல் நாடு திரும்பிய அவர், பீஹாரின் கடிஹார் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அதன்பின், திருமணமாகி மூன்று பெண் குழந்தைகளும் பிறந்தன. அவரது கணவர், ஆராவில் சிறிய மளிகை கடையை நடத்தி வந்தார். கடந்த 2010ல், கணவர் இறந்த பின், அந்த கடையை சுமித்ரா பிரசாத் நடத்தி வருகிறார்.இதற்கிடையே, இத்தனை ஆண்டுகளாக தன் விசாவை அவர் தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளார். இதில் பல சிக்கல்களையும் அவர் சந்தித்தார். உள்ளூர் மக்கள் அவரை வங்கதேசம் செல்லும்படி கூறி வந்தனர். விசா புதுப்பிப்பது உள்ளிட்டவற்றுக்காக போலீஸ் ஸ்டேஷன், துாதரக அலுவலகங்களுக்கு அலைய வேண்டியிருந்தது.

முதல் முறை

விசா புதுப்பிக்கும் அலுவலகம் கோல்கட்டாவுக்கு கடந்தாண்டு மாற்றப்பட்டது. அங்கு சென்றபோதுதான், சி.ஏ.ஏ., எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், இந்திய குடியுரிமை கோரலாம் என்ற தகவல் அவருக்கு தெரியவந்தது.இந்த சட்டத்தின்படி, நம் அண்டை நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்டவற்றில் சிறுபான்மையினராக இருந்து நாடு திரும்பிய, ஹிந்து, கிறிஸ்துவர், சீக்கியர் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து, குடியுரிமை கேட்டு அவர் விண்ணப்பித்தார்.விசாரணைகளுக்குப் பின், தற்போது அவருக்கு இந்திய குடியுரிமை கிடைத்துள்ளது. பீஹாரில், இந்த சட்டத்தின்கீழ் குடியுரிமை வழங்கப்படுவது இதுவே முதல் முறை. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கும் மற்றும் மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்த சுமித்ரா பிரசாத், தன், 40 ஆண்டுகால விசா புதுப்பிக்கும் போராட்டங்களுக்கு முடிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Yes your honor
ஜன 08, 2025 09:43

தற்போதுள்ள மோடிஜி, அமித் ஷாஜி கூட்டணி நாட்டிற்கு உள்ளேயும், நாட்டிற்கு வெளியேயும் பல்வேறு நன்மையான திட்டங்களை வகுத்துக் கொடுத்துள்ளனர். ஊழல்வாதிகளுக்கும், ஊரை அடித்து தன் வீட்டு உலையில் போடுபவர்களுக்கும் மட்டும் தான் மோடிஜியும் அமித்ஷாஜியும் கெட்டவர்கள். மற்றபடி, உலகமே நம் பிரதமரை மனதார பாராட்டுகிறது.


Mettai* Tamil
ஜன 08, 2025 09:32

சி ஏ ஏ ..வால் விமோசனம் .....வாழ்த்துக்கள் அம்மா ...


N.Purushothaman
ஜன 08, 2025 08:54

வாழ்த்துக்கள் அம்மா ..இனி சொந்த நாட்டிலேயே நிம்மதியாக இருக்கலாம் ...


karthik
ஜன 08, 2025 07:31

மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா. மதத்தின் அடிப்படையில் ஒரு விளக்கெண்ணெய் நாட்டை பிரித்த செயலால் இன்று சனாதன மக்கள் சொந்த மண்ணில் போராடி கொண்டு இருக்கிறோம். இந்த நெலமை முழுதுமாக மாற வேண்டும்.


Kasimani Baskaran
ஜன 08, 2025 06:23

மம்தாவும், மன்மோகன் சிங்கும் செய்த ஓட்டுப்போட வங்கதேசத்தவர்கள் என்ற அடாவடியில் வங்கதேச கள்ளக்குடியேறிகள்தான் பயன் பெற்றார். இவர் போன்றவர்கள் தாங்கொணா துயரத்தைத்தான் அனுபவித்தார்கள். இன்றாவது இவர்களுக்கு விடியல் வந்ததே என்ற மகிழ்ச்சி.


xyzabc
ஜன 08, 2025 05:39

Congratulations maam. You deserve it


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை