உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயோமெட்ரிக் செயல்முறை மீண்டும் துவங்கும்: ஹிமந்த பிஸ்வ சர்மா

பயோமெட்ரிக் செயல்முறை மீண்டும் துவங்கும்: ஹிமந்த பிஸ்வ சர்மா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

குவஹாத்தி : ''குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தற்போது ஒரு தெளிவு கிடைத்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு புதுப்பித்தலின் போது முடக்கப்பட்ட பயோமெட்ரிக் செயல்முறை மீண்டும் துவங்கும்,'' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

ஆலோசனை

வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேடு, 2019 ஆக., 31ல் வெளியிடப்பட்டது. இதில், 3.4 கோடி பேர் விண்ணப்பித்த நிலையில், 19 லட்சம் பேர் பதிவேட்டில் இடம் பெறவில்லை. மேலும், 27 லட்சம் பேரின் பயோமெட்ரிக் தரவுகள் முடக்கப்பட்டதால், அவர்களால் 'ஆதார்' பெற முடியவில்லை.இந்நிலையில், குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் நேற்று முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியதாவது:பயோமெட்ரிக் விவகாரம் தொடர்பாக, அனைத்து அசாம் மாணவர் சங்கம் மற்றும் பிற அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். தேர்தலுக்குப் பின் தீர்வு எட்டப்படும். 2014-க்குப் பின் நம் நாட்டுக்கு வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்பது தற்போது தெளிவாகிவிட்டது.

சிக்கல்

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை கிடைக்கும். பயோமெட்ரிக் முடக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டு மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதில் நிச்சயம் ஒரு தீர்வு காணப்படும். குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மக்கள் உணர்ச்சிவசப்படக் கூடாது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை