உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ. - ம.ஜ.த.,வின் செயல் திட்டம் முதல்வர் சித்தராமையா கண்டுபிடிப்பு

பா.ஜ. - ம.ஜ.த.,வின் செயல் திட்டம் முதல்வர் சித்தராமையா கண்டுபிடிப்பு

பெங்களூரு: ''லோக்சபா தேர்தலுக்கு முன்பு வகுப்புவாத பிரச்னையை உருவாக்கி, அதில் ஆதாயம் தேட பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் முயற்சிக்கின்றனர். இது தான் அவர்களின் ஒரே செயல் திட்டம்,'' என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.பெங்களூரில் நேற்று முதல்வர் சித்தராமையா அளித்த பேட்டி:பா.ஜ., - ம.ஜ.த.,வின் தங்களுக்கு சொந்தமான நிலத்தில் எந்த கொடி வேண்டுமானாலும் ஏற்றலாம். அதை வரவேற்கிறோம். ஆனால், தேசியக் கொடியை ஏற்ற அனுமதி பெற்ற பின், வேறு கொடியை ஏற்ற அனுமதிக்க மாட்டோம்.மாண்டியா மாவட்ட நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் அசோக், ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆகியோர் வேண்டுமென்ற பிரச்னைகளை உருவாக்கி, மக்களை துாண்டி விடுகின்றனர்.லோக்சபா தேர்தலுக்கு முன்பு வகுப்புவாத பிரச்னையை உருவாக்கி, அதில் ஆதாயம் தேட பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் முயற்சிக்கின்றனர். இது தான் அவர்களின் ஒரே செயல் திட்டம்.என்னை எதிர்த்து பேச, இவர்களுக்கு 'நான் ஹிந்து விரோதி' என்பதை விட, வேறு என்ன பேசப்போகின்றனர். காங்கிரஸ் அரசு, வாக்குறுதிகளை நிறைவேற்றுவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.நான் ஹிந்து தான். அனைத்து மத மக்களையும் நேசிக்கிறேன். மதச்சார்பின்மை, சமத்துவம், சகவாழ்வு, சகிப்புத்தன்மை ஆகிய அரசியல் அமைப்பு விஷயங்களை நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்