உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / லஷ்கர் இ பாகிஸ்தான்: காங்கிரசை கடுமையாக விமர்சித்த பா.ஜ.

லஷ்கர் இ பாகிஸ்தான்: காங்கிரசை கடுமையாக விமர்சித்த பா.ஜ.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டின் ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் காங்கிரசை லஷ்கர் இ பாகிஸ்தான் என பா.ஜ., கடுமையாக விமர்சித்துள்ளது.பிரதமர் மோடி பற்றி சர்ச்சைக்குரிய பதிவு ஒன்றை காங்கிரஸ், வெளியிட்டது. பிரதமரின் பெயரை குறிப்பிடாமல், அவரை மறைமுகமாகவும் அதில் காங்கிரஸ் விமர்சித்து இருந்தது. காங்கிரசின் இத்தகைய செயலை பா.ஜ., கடுமையாக கண்டித்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாட்டை பலவீனப்படுத்தும் செயலாக காங்கிரசின் நடவடிக்கை அமைந்துஇருக்கிறது என்று பா.ஜ., விமர்சித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் முக்கிய தலைவரும், தேசிய செய்தித் தொடர்பாளருமான கவுரவ் பாட்டியா நிருபர்களிடம் கூறியதாவது: பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு அவர்கள்(காங்கிரஸ்) சமிக்ஞை அனுப்புகிறார்கள். சொந்த நாட்டுடன் கைகோர்க்காமல் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அவர்கள் வெளியிட்ட பதிவு தெரியாமல் பதிவிட்டது அல்ல.நாட்டின் ஒருமைப்பாட்டை அழிக்கும் முயற்சியாகவும், பிரதமரை விமர்சித்தும் வெளியிடப்பட்ட பதிவு. இப்படி ஒரு பதிவை வெளியிட்ட காங்கிரசை லஷ்கர் இ பாகிஸ்தான் என்றே அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

பா மாதவன்
ஏப் 30, 2025 12:10

ஐயா, இங்கு பாகிஸ்தான் தீவீரவாதிகளை விட கொடூர பாகிஸ்தான் அபிமான தீவிரவாதிகள் நிறைய உள்ளனர். முதலில், அவர்களை கண்டுபிடித்து நம் நாட்டை விட்டு அவர்களுக்கு பிரியமான அந்த பாகிஸ்தானிய நாட்டிற்கு அனுப்பி விடவும். புண்ணியமாக போகும். அப்பொழுது தான் அங்கு சுதந்திரமாக மகிழ்ச்சியாக அவர்களால் உலா வர முடியுமோ இல்லையோ நம்மால் மகிழ்ச்சியை நம் நாட்டில் பூரணமாக உணர முடியும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 30, 2025 10:59

தேசிய அளவில் காங்கிரசின் உண்மை முகம் தேசவிரோத ஆதரவு மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத, மத மாற்ற ஆதரவு ..... அதே நோக்கம் கொண்ட பிராந்திய கட்சிகள் திமுக, திரிணாமூல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் பல ..... சுருக்கமாகச் சொன்னால் இண்டி கூட்டணி மொத்தமும் இப்படித்தான் .... இது இந்தியாவின் பலவீனம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் பலம் ..... அதை பாகிஸ்தான் சரியாகப் பயன்படுத்துகிறது ....


V Venkatachalam
ஏப் 30, 2025 10:16

நாம கான்+ கிராஸ் பற்றி பேசுவது வேஸ்ட். இவங்களுக்கு தேசபற்று என்பது துளி கூட கிடையாது. கொள்ளையடிக்க எல்லா வழிகளும் அடை பட்டு விட்டதால் ... பரிதாபமாக இருக்கிறார்கள்


அரவழகன்
ஏப் 30, 2025 09:45

இந்தியா வல்லரசாக வளர்வதை காங்கிரஸ் விரும்ப வில்லை


VARUN
ஏப் 30, 2025 14:21

இந்தியா வல்லரசுஆவது என்பது, பிஜேபி மத்தியில் இருக்கும்வரை கனவுமாத்திரம்.


V Venkatachalam
ஏப் 30, 2025 16:10

வருண் என்னும் க.உ.பீஸ்க்கு வல்லரசு ன்னா என்னான்னு தெரியுமா? எதை எடுத்தாலும் டமாரம் அடிக்கன்னு ஓரே கூட்டமே இருக்கு. இவர்களுக்கு வல்லரசு அப்படீன்னு ஒரு வார்த்தை காதில் விழுந்தால் போதும். டமாரத்த ஒரு அடி அடிப்பாய்ங்க.அப்படிப்பட்ட அறிவு கொழுந்துங்க..


Gopal
ஏப் 30, 2025 08:31

காங்கிரஸ் ஒரு தேச துரோக கட்சி. அதை முழுவதுமாக ஒழித்து கட்ட வேண்டும்.


Barakat Ali
ஏப் 30, 2025 08:27

தமிழகத்துல பாகிஸ்தானுக்கு எடுப்ஸ் அதிகமா இருக்குதுங்கய்யா ... சுமார் நாற்பது சதவிகிதமாகவும் இருக்கும்.. அதைத்தவிர இருக்கவே இருக்கு மேற்குவங்கம், கேரளா, தெலங்கானா, இப்போ கர்நாடகா .....


நிக்கோல்தாம்சன்
ஏப் 30, 2025 09:06

உண்மையை பேசினால் உங்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் வரும், போன் , ஈமெயில் என்று பலகட்டத்திலும் பல தொடுப்பிற்கு பிறந்த எடுப்புகள் மிரட்டிய வண்ணம் உள்ளனர் , நீங்க எப்படி ஹாண்டில் பண்றீங்க


Barakat Ali
ஏப் 30, 2025 11:09

நியாயத்தைப் பேசும் இஸ்லாமியர் துரோகியாகக் கருதப்படுகிறார் .... இங்கேயே என்னைத் தூற்றி வரும் கமெண்ட்டுகளைப் பார்த்திருப்பீர்கள் .... இதற்கு வெளியே தனிப்பட்ட முறையில் எனக்கு மிரட்டல்கள் வரவில்லை ..... என்னை ஹிந்து மத ஆதரவாளனாகவோ / சங்கியாகவோ குறிப்பிட்டு கண்டித்து எழுதுவதன் மூலம் சங்கிகள் நியாயம் பேசுவார்கள் என்ற கருத்தும் தொனிக்கிறது .... ஆகவே கண்டனங்கள் இங்கேயும் குறைந்து விட்டன .....


raja
ஏப் 30, 2025 08:23

திருடும் கூட்டம் தான் இந்த திருட்டு கான் கிராஸ் மற்றும் தமிழகத்தின் திருடர்கள் முன்நேற்ற கழகம் ...


VENKATASUBRAMANIAN
ஏப் 30, 2025 08:14

செய்தவர்களை பிடித்து திகாரில் போடுங்கள். சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. முதலில் நாடு அப்புறம் எல்லாமே


sundar
ஏப் 30, 2025 07:49

சிறுபான்மை காங்கிரஸ் அல்லது ஹிந்து விரோத காங்கிரஸ் என்றும் அழைக்கலாம்


சமீபத்திய செய்தி