உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் வெற்றியை மதுவிருந்துடன் கொண்டாடியதாக பா.ஜ. எம்.பி. மீது புகார்

தேர்தல் வெற்றியை மதுவிருந்துடன் கொண்டாடியதாக பா.ஜ. எம்.பி. மீது புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: லோக்சபா தேர்தல் வெற்றியை மதுபாட்டில், அசைவ உணவுடன் விருந்து வைத்து பா.ஜ. எம்.பி. கொண்டாடிய சம்பவம் பெங்களூருவில் நடந்ததாக கூறப்படுகிறது.நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் சிக்கபெல்லாபூர் லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளராக போட்டியிட்டு சுதாகர் வெற்றி பெற்றார்.வெற்றியை கொண்டாட இன்று நீலமங்களா என்ற இடத்தில் பங்கேற்ற தன் ஆதரவளாளர்களுக்கு மதுபாட்டிலுடன் கறிவிருந்து வைத்தார்.மதுபாட்டிலை வாங்கிய நீண்ட வரிசையில் காத்திருக்கும் புகைபடங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இது போன்ற கொண்டாட்டத்திற்கு போலீஸ் அனுமதி வாங்காமல் நடந்துள்ளதாக ஆளும் காங்., குற்றம்சாட்டியுள்ளது.இது குறித்து சுதாகர் எம்.பி.யிடம் கேட்டதற்கு நடந்த விழாவுக்கும் இதுக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அரசு
ஜூலை 09, 2024 08:38

இந்த செய்தி மது விலக்கு கேட்கும் தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களுக்கு அர்ப்பணம்


saravan
ஜூலை 09, 2024 10:44

அதிமுக ஆட்சியில் திமுக கேட்டது ஞாபகம் இல்லையா


Senthoora
ஜூலை 09, 2024 07:46

அவங்களை என்ஜாய் பண்ண விடுங்க, மது இல்லாத வெற்றி கொண்டாட்டம் எங்கே இருக்கு, அதுக்காக கட்சியின் பெயரை நாறடிக்க வேண்டாம்.


hari
ஜூலை 09, 2024 10:34

உனக்கு சரக்கு தரமாட்டோம்..... 200 உபிஸ்கு கிடையாது


Yes
ஜூலை 09, 2024 06:20

இந்த மாதிரி லங்கடா தனமான ஆட்கள் தான் பாஜகவை கெடுக்கிறார்கள்.


Kasimani Baskaran
ஜூலை 09, 2024 05:44

கொடுத்ததுதான் கொடுத்தார்கள் ஒரு கால் பாட்டிலாவது கொடுத்து இருக்க வேண்டாமா . வெறும் பீர் கொடுத்து கட்சியில் பெயரை நாறடித்ததற்கு கண்டனங்கள்.


J.Isaac
ஜூலை 09, 2024 08:06

அண்ணாமலைக்கு சொல்லுங்கள்.


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ