உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பா.ஜ., அரசு: அமித்ஷா பெருமிதம்

வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த பா.ஜ., அரசு: அமித்ஷா பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ., அரசு கடந்த 10 ஆண்டுகளில் வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது என மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார்.புதுடில்லியில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் கணினிமயமாக்கல் திட்டத்தை துவக்கி வைத்து மத்திய அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மே மாதத்துடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், மோடி அரசு இரண்டு பெரிய பணிகளைச் செய்துள்ளது. ஒன்று நாட்டின் 23 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்தது மற்றும் 60 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன், மின்சாரம் போன்ற வசதிகளை ஏற்படுத்தியது. இரண்டாவது கூட்டுறவு அமைச்சகம் மூலம் சுயவேலைவாய்ப்பைக் கொண்டு வந்தது. இந்த அரசு வலுவான கிராமப்புற வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

g.s,rajan
ஜன 31, 2024 00:44

Farmers are Still Betrayed in India by the BJP Government...


GMM
ஜன 30, 2024 19:39

வலுவான கிராமப்புற, (நகர்ப்புற) வளர்ச்சிக்கு மத்திய அரசு அடித்தளம் அமைத்தாலும் தமிழகம் போன்ற மாநில அரசுகள் அரசியல் ஆதாயம் பெற வளர விடுவது இல்லை. வளர்ச்சி முடக்கப்பட்டு, கிராம புற விவசாயம், சிறு தொழில் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் எப்போதோ அழிக்கப்பட்டு விட்டன. மாநிலங்கள் மத்திய அரசை மிரட்டி, உள்ளாட்சி அமைப்புகள் அடைக்கப்பட்டு ஒரு கமிஷன் ஏஜெண்ட் போல் செயல்பட்டு வருகின்றன. உயர் கல்வி மத்திய அரசு கீழ்., small cases தவிர பிற சட்டம் ஒழுங்கு மாநில அரசு கீழ் இருக்க கூடாது. ஒரு மாநில முதல்வர் மருத்துவ /தனிப்பட்ட காரணங்களுக்கு வெளிநாடு செல்லலாம். முதலீட்டை எப்படி ஈர்க்கும்? திராவிடம் தான் ஏதும் அறியாது. ஸ்பெயின் எப்படி மாநிலத்துடன் முதலீடு பற்றி பேச முடியும்.? ஒரு நாட்டின் பிரதிநிதிகள் உடன் மட்டும் தான் பேச வேண்டும்? அங்கும் திராவிட மாடல்?


அப்புசாமி
ஜன 30, 2024 17:59

கிராமத்துல ஒண்ணும் சரியில்லன்னு தமிழக கெவுனர் சொல்றாரே..


மேலும் செய்திகள்









புதிய வீடியோ