உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பா.ஜ., தலைவர் விஜயேந்திரா... மாற்றம்? பொடி வைக்கிறார் அசோக்

பா.ஜ., தலைவர் விஜயேந்திரா... மாற்றம்? பொடி வைக்கிறார் அசோக்

பெங்களூரு : பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பால், மாநில தலைவர் விஜயேந்திரா மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்கும், 'பொடி' வைத்து பேசி உள்ளார்.கர்நாடக பா.ஜ., தலைவராக, கடந்த ஆண்டு நவம்பரில் நியமிக்கப்பட்டவர் விஜயேந்திரா. இவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் இரண்டாவது மகன். எடியூரப்பாவும், விஜயேந்திராவும் காங்கிரஸ் தலைவர்களுடன் கைகோர்த்து, சமரச அரசியல் செய்வதாக, விஜயபுரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் குற்றச்சாட்டு கூற ஆரம்பித்தார்.கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்த விஷயத்தில், விஜயேந்திரா தன்னிச்சையாக முடிவு எடுத்ததாகவும், மூத்த தலைவர்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். சமீபகாலமாக விஜயேந்திரா தலைமை மீது, கட்சியின் முக்கிய தலைவர்கள், பிரமுகர்களுக்கு அதிருப்தி அதிகரித்துள்ளது. தலைவர் பதவியில் இருந்து அவரை மாற்ற வேண்டும் என்றும் கட்சி மேலிடத்திடம், சிலர் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:மாநில தலைவர் விஜயேந்திராவுக்கு எதிராக, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் பேசி வருகின்றனர். இதை கட்சி மேலிடம் கவனித்து வருகிறது. விஜயேந்திராவை மாற்றும் விஷயத்தில், மேலிடம் உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கும். நானும் டில்லி சென்று, மேலிட தலைவர்களை சந்தித்து பேச உள்ளேன். கட்சிக்குள் நிலவும் பிரச்னை பற்றி எடுத்து கூறுவேன். பிரச்னைக்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டும். கர்நாடக பா.ஜ.,வில் உட்கட்சி பூசல் இருப்பது உண்மை தான். உள் ஒப்பந்த அரசியலுக்கு பலிகடா ஆனேன் என்று, எங்கள் கட்சி எம்.எல்.சி., ரவி கூறி உள்ளார். எதுவாக இருந்தாலும் ஆதாரத்துடன் பேச வேண்டும். கட்சிக்குள் நிலவும் பிரச்னையை, பொது வெளியில் பேச வேண்டாம்.

மேலிடம் அனுமதி

'மூடா' முறைகேடு தொடர்பாக, பாதயாத்திரை நடத்தும்படி மேலிட தலைவர்கள் என்னிடம் கூறினர். கூட்டு தலைமையின் கீழ் பாதயாத்திரை நடத்தினோம்.வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த முறைகேட்டை கண்டித்து, பல்லாரிக்கு பாதயாத்திரை நடத்த வேண்டும் என்று, நாங்கள் முன்பே முடிவு செய்தோம். ஆனால், அதை விட மூடா முறைகேடு பெரிதாக இருந்ததால், முதலில் மைசூரு பாதயாத்திரை சென்றோம்.பசனகவுடா பாட்டீல் எத்னால், ரமேஷ் ஜார்கிஹோளி உள்ளிட்ட தலைவர்கள் கூடலசங்கமாவில் இருந்து, பல்லாரி வரை பாதயாத்திரை நடத்த முடிவு செய்து உள்ளனர். கட்சி மேலிடத்திடம் அனுமதி கேட்போம் என்றும் கூறி உள்ளனர்.கட்சி மேலிடம் அனுமதி கொடுத்தால், பாதயாத்திரையில் கலந்து கொள்ள நானும் தயாராக உள்ளேன். அனைவரும் ஒருங்கிணைந்து செல்ல வேண்டும் என்பது என் ஆசை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

MADHAVAN
ஆக 15, 2024 12:35

விஜயேந்திரா எடியூரப்பாவின் வாரிசுதானே ? அப்புறம் ன்ன வாரிசு அரசியல் கூடாது அது இதுன்னு


Sampath Kumar
ஆக 15, 2024 11:43

இழிச்ச வாய்க்காலின் ஊரில் இலுப்பை பூ தான் சக்கரையம் கேட்டுக்கேட்ட ஒரு கட்சி இந்தியாவை அல்லவது உண்மையில் இந்தியர்கள் பாவம் செய்தவர்கள் நன்றாக கருமா வை அனுபவிக்கட்டோம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை