உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தமிழக பாடகியை திருமணம் செய்தார் பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா

தமிழக பாடகியை திருமணம் செய்தார் பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யா

சென்னை: பெங்களூரு தெற்கு தொகுதி பா.ஜ., எம்.பி., தேஜஸ்வி சூர்யாவுக்கும், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசை பாடகி சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்திற்கும் இன்று ( மார்ச் 06) திருமணம் நடந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.தேஜஸ்வி சூர்யா, பா.ஜ.,வின் இளைஞரணியான யுவ மோர்ச்சாவின் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். 2019 ,2024 ல் பெங்களூரு தெற்கு தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u8rxcxp8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவருக்கும், தமிழகத்தை சேர்ந்த கர்நாடக இசைப் பாடகியான சிவஸ்ரீ சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்துக்கும் பெங்களூருவில் திருமணம் நடந்தது. சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத், பயோ பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் பரத நாட்டியத்தில் பட்டம் பெற்ற இவர், சமஸ்கிருதத்தில் முதுகலை படிப்பு படித்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில் பாடல் ஒன்றை பாடி உள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் போது, ராமர் குறித்து சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத் பாடிய பாடலை, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டு பாராட்டி இருந்தார்.தேஜஸ்வி சூர்யா சிவஸ்ரீ ஸ்கந்த பிரசாத்தின் திருமணம் குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் நெருக்கமான அரசியல் பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் சோமண்ணா, எம்.பி., சி.என். மஞ்சுநாத், பா.ஜ., தேசிய பொதுச்செயலர் பி.எல். சந்தோஷ், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, பிரதாப் சின்ஹா, அமித் மாளவியா, பிஓய் விஜேந்திரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சமூக வலைதளங்களில் இருவரின் திருமண புகைப்படம் வெளியாக , ஏராளமானோர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

C G MAGESH
மார் 07, 2025 09:54

வாழ்த்துக்கள்


Mecca Shivan
மார் 07, 2025 08:51

அவர் பாடகி அல்ல ..கர்நாடக இசை பாடகி மற்றும் உபன்யாஸகி ..


Kovandakurichy Govindaraj
மார் 06, 2025 23:56

நல்வாழ்த்துக்கள்


கத்தரிக்காய் வியாபாரி
மார் 06, 2025 22:54

வாழ்த்துக்கள்.


Rajathi Rajan
மார் 06, 2025 20:33

கலப்பு திருமணம்.. ... இதுக்கு ஏதாவது அரசு சலுகை உண்டோ???


Anand
மார் 07, 2025 10:31

பந்திக்கே வேண்டாம் என்றாலும் ஏண் இலை ஓட்டை என கூவுகிறீர்கள்?


வாய்மையே வெல்லும்
மார் 13, 2025 09:49

இனாம் வாங்கியே வாழ்ந்த குடும்பம் .. உழைக்கும் நினைப்பை கொன்ற குடும்பத்து கிட்ட கேளுங்க. யாருமே பதில் சொல்லட்டி அறிவாலய வாசலில் நின்று மன்றாடி கேளுங்க .. பதில் வரலாம் ..


Bahurudeen Ali Ahamed
மார் 06, 2025 19:41

வாழ்த்துக்கள், மணமக்கள் வாழ்க வளமுடன்


vijayaraj
மார் 06, 2025 15:53

வாழ்த்துக்கள்


Subramanian N
மார் 06, 2025 15:48

வாழ்த்துக்கள்


manu putthiran
மார் 06, 2025 15:10

வாழ்க வளத்துடன்..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை