உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பிய பா.ஜ.,

கெஜ்ரிவால் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பிய பா.ஜ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரியுள்ள நிலையில், அவருடைய வீட்டுக்கு, பா.ஜ., மூத்த தலைவர் விஜய் கோயல், ஆம்புலன்ஸ் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, அவருக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. இதன்படி, இன்று அவர் சிறையில் மீண்டும் ஆஜராக வேண்டும்.இதற்கிடையே, தனக்கு பல உடல் உபாதைகள் இருப்பதாகவும், அதற்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்கு வசதியாக, மேலும் ஒரு வாரம் இடைக்கால ஜாமினை நீட்டிக்கக் கோரி டில்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான விஜய் கோயல் கெஜ்ரிவால் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் அனுப்பியுள்ளார்; அவரும் உடன் சென்றார். ஆனால், போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

V GOPALAN
ஜூன் 02, 2024 18:43

When common man can understand Kejriwal drama, surprise our CJi is not and searching for similar case laws in international law books


SP
ஜூன் 02, 2024 15:33

மிக மிக ஆபத்தான நபர், நீதிமன்றத்தையும், மக்களையும் முட்டாளாக நினைத்துகொண்டுள்ளார்.நீதிமன்றம் இவரது பித்தலாட்டங்களை கவனிக்கவேண்டும்.


Dharmavaan
ஜூன் 02, 2024 02:40

கோர்ட்டை ஏமாற்ற இந்த நாடகம் பிஜேபி செய்வாது சரியே


முருகன்
ஜூன் 01, 2024 22:35

இப்போதே ஆரம்பித்து விட்டார்கள் தரம் தாழ்ந்த விஷயங்களை


Ramesh Sargam
ஜூன் 01, 2024 21:46

டெல்லில் நாய் பிடிக்கும் வண்டிகள் இல்லையா?


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி