உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் பத்திரங்களில் அதிக வருவாய் ஈட்டிய பா.ஜ.,

தேர்தல் பத்திரங்களில் அதிக வருவாய் ஈட்டிய பா.ஜ.,

புதுடில்லி : தேர்தல் பத்திரங்கள் வாயிலாக, 2022 - 23ம் நிதியாண்டில் மட்டும், மத்தியில் ஆளும் பா.ஜ., 1,300 கோடி ரூபாய் பெற்றுள்ளது. இது, இதே காலகட்டத்தில், காங்கிரஸ் பெற்றதை விட ஏழு மடங்கு அதிகம்.2022 - 23ம் நிதியாண்டுக்கான ஆண்டு தணிக்கை அறிக்கையை, தலைமை தேர்தல் கமிஷனில் ஆளும் பா.ஜ., சமர்ப்பித்துள்ளது. அதன்படி, இந்த காலகட்டத்தில், பா.ஜ.,வின் மொத்த பங்களிப்பு 2,120 கோடி ரூபாயாக உள்ளது. இதில், 61 சதவீதம் அதாவது 1,272 கோடி ரூபாய், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பெறப்பட்டதாக அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், பா.ஜ.,வின் மொத்த பங்களிப்பு 1,775 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2022 - 23ம் நிதியாண்டில் 2,120 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வருமானம்கடந்த 2021 - -22ம் நிதிஆண்டில், 1,917 கோடி ரூபாயாக இருந்த கட்சியின் மொத்த வருமானம், மதிப்பீட்டு காலத்தில் 2,360.8 கோடி ரூபாயாக இருப்பதாக பா.ஜ., குறிப்பிட்டுள்ளது. மற்றொரு தேசிய கட்சியான காங்., 2022 - 23ம் நிதியாண்டில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 171 கோடி ரூபாய் பெற்றுஉள்ளது. கடந்த 2021 - 22ம் நிதியாண்டில், 236 கோடி ரூபாய் பெறப்பட்ட நிலையில், காங்கிரசின் வருமானம் குறைந்துள்ளது. மாநில கட்சிகளை பொறுத்தவரை, ஆந்திர சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், 2022 - 23ம் நிதியாண்டில், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக 34 கோடி ரூபாய் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஆளும் தி.மு.க., உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் ஆண்டு தணிக்கை விபரங்கள் வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
பிப் 11, 2024 18:37

விஞ்ஞான ஊழலில் இவர்கள் எல்லோரையும் மிஞ்சி விட்டார்கள், வாழ்த்துக்கள்!


Suppan
பிப் 11, 2024 15:48

லஞ்சப்பணம் கருப்புப்பணமாகத்தான் இருக்கும். ஆனால் தேர்தல் பத்திரங்கள் வங்கிகள் மூலம் பெறப்படுவது. வெள்ளைப் பணம் எது நல்லது.


ஆரூர் ரங்
பிப் 11, 2024 15:25

தேர்தல் பத்திரங்களை வங்கி கணக்கு மூலம் முழுக்க முழுக்க வெள்ளை பணத்தில்தான் வாங்கி அளிக்க முடியும். யார் யார் வாங்கினார்கள் என்ற விவரம் ஸ்டேட் வங்கியில் நிரந்தரமாக இருக்கும்.


J.Isaac
பிப் 11, 2024 14:17

இதுவும் மறைமுகமாக ஒருவகையில் கையூட்டு தானே. கொடுத்தவர்கள் பெயர் வெளிவராதே


Velan Iyengaar
பிப் 11, 2024 08:12

இது அடேங்கப்பா வகை விஞ்ஞான ஊழல்


sankar
பிப் 11, 2024 11:09

போயி கேசு போடு தம்பி -


sankar
பிப் 11, 2024 11:11

இந்தநாட்டின் சாபக்கேடு


ramesh
பிப் 11, 2024 12:06

என்ன சங்கர் தேர்தல் பத்திரம் மூலம் லஞ்சம் வாங்கினால் தப்பு இல்லை.


J.V. Iyer
பிப் 11, 2024 07:20

திராவிட பண முதலைகள் கான்-கிரேஸுக்கு கொடுக்கலாமே?


Ramesh Sargam
பிப் 10, 2024 23:28

இதற்கு எதிர்க்கட்சியினர் ஏதாவது எதிப்பு தெரிவித்து, இதில் குறை கூறுவார்கள்.


Priyan Vadanad
பிப் 10, 2024 22:41

அப்புறம் என்ன INDIA கூட்டணியையும் உடைச்சாச்சுது. ஓடி ஓடி உழைக்கணும் என்கிற அவசியமே இல்லை. உட்கார்ந்த இடத்திலேயே சாப்பிடலாம். எதுவும் செய்யலாம்.


J.Isaac
பிப் 10, 2024 21:45

லஞ்சப்பணம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை