உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

கங்கம்மன குடி: தண்ணீர் தொட்டியில் விழுந்து, கட்டடத் தொழிலாளியின் 10 வயது மகன் உயிரிழந்தார்.யாத்கிரியை சேர்ந்த குடும்பத்தினர், பிழைப்பு தேடி பல ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருக்கு வந்தனர். அப்பிகெரேவின், சிவண்ணா தோட்டம் அருகில் வசிக்கின்றனர். கட்டட கட்டுமான கூலி வேலை செய்கின்றனர். இவர்களுக்கு அபுதுல் பாஷா, 10, என்ற மகன் உள்ளார்.இவர்கள் வசிக்கும் பகுதியில், நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. அப்போது சிறுவன் வீட்டின் வெளியே விளையாடிய சிறுவன், இருட்டில் தெரியாமல் திறந்திருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்தார். இதை யாரும் கவனிக்கவில்லை.சிறிது நேரத்துக்கு பின், மகனை காணாமல் பெற்றோர் பல இடங்களில் தேடினர்.அதன்பின் சிறுவன் தண்ணீர் தொட்டியில் இறந்து கிடப்பதை கண்டனர்.கங்கம்மனகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை