மேலும் செய்திகள்
வங்கதேச எல்லையில் ஊடுருவல் முயற்சி அதிகம்: மத்திய அரசு
24 minutes ago
விஜயை பார்த்து திமுகவுக்கு பயம்: அண்ணாமலை பேட்டி
2 hour(s) ago | 8
கலபுரகி: கார் விபத்தில் பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜ் மத்திமூட், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.கலபுரகி ரூரல் தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜ் மத்திமூட், 47. நேற்று காலை கலபுரகி டவுனில் உள்ள தனது வீட்டில் இருந்து, கலபுரகி ரூரல் பகுதியில் உள்ள பாலா கிராமத்திற்கு, அரசு காரில் சென்று கொண்டு இருந்தார். எம்.எல்.ஏ.,வுடன் அவரது உதவியாளர், பாதுகாவலரும் சென்றனர்.பாலா கிராம பகுதியில் சென்ற போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி சாலையோரம் கவிழ்ந்தது. முதலில் காருக்குள் இருந்து வெளியே வந்த, பாதுகாவலர், பின்னர் எம்.எல்.ஏ.,வையும், உதவியாளர், டிரைவரையும் மீட்டார்.இந்த விபத்தில் எம்.எல்.ஏ., உட்பட நான்கு பேரும் லேசான காயம் அடைந்தனர். இன்னொரு காரில், கலபுரகி டவுனில் உள்ள, தனியார் மருத்துவமனைக்கு, எம்.எல்.ஏ., அனுப்பி வைக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும், எம்.எல்.ஏ.,வின் மனைவி, மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். கணவரை பார்த்து கண்ணீர்விட்டு அழுதார்.மனைவியை, எம்.எல்.ஏ., சமாதானம் செய்தார். சிகிச்சை பெற்று காரில் வீட்டிற்கு திரும்பினார். விபத்து குறித்து கார் டிரைவரிடம், கலபுரகி ரூரல் போலீசார் விசாரிக்கின்றனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு, கலபுரகி அப்சல்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., எம்.ஒய்.பாட்டீல் சென்ற, அரசு காரும் விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
24 minutes ago
2 hour(s) ago | 8