உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிவசேனாவில் இணைந்தார் காங்., முன்னாள் எம்.பி., தியோரா 

சிவசேனாவில் இணைந்தார் காங்., முன்னாள் எம்.பி., தியோரா 

மும்பை: காங்கிரசில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோரா, 47, மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் சிவசேனாவில் நேற்று இணைந்தார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா - பா.ஜ., - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

எதிர்ப்பு

இங்கு, காங்., மூத்த தலைவராக இருந்த மிலிந்த் தியோரா, 2004 மற்றும் 2009ல், தெற்கு மும்பை தொகுதியின் எம்.பி.,யாக பதவி வகித்துள்ளார். மேலும், மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். எனினும், 2014 மற்றும் 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், பிளவுபடாத சிவசேனாவிடம், மிலிந்த் தியோரா  தோல்வி அடைந்தார்.வரும் ஏப்., - மே மாதங்களில் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், தெற்கு மும்பை தொகுதியில் போட்டியிட, மிலிந்த் தியோரா விருப்பம் தெரிவித்தார். இதற்கு, கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் கடந்த சில நாட்களாக அவர் அதிருப்தியில் இருந்தார்.இந்நிலையில், காங்கிரசில் இருந்து விலகுவதாக மிலிந்த் தியோரா அறிவித்தார்.

ராஜினாமா

இது குறித்து, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், 'காங்., அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன். 'கட்சியுடனான என் குடும்பத்தின், 55 ஆண்டு கால உறவை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.இதைத் தொடர்ந்து, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் வீட்டுக்குச் சென்ற மிலிந்த் தியோரா, அவர் முன்னிலையில் சிவசேனாவில் முறைப்படி இணைந்தார். அவருக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

'எந்த பாதிப்பும் இல்லை'

மிலிந்த் தியோரா  விலகல் குறித்து, காங்., பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:மிலிந்த் தியோரா விலகலால், காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கட்சி மற்றும் சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை உள்ள லட்சக்கணக்கானோர் எங்களுடன் உள்ளனர். தியோரா வெறும் பொம்மை தான். அவர் எப்போது ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்தவர், பிரதமர் மோடி. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி