மேலும் செய்திகள்
இந்தியா- ரஷ்யா வர்த்தகம் 80 சதவீதம் அதிகரிப்பு: புடின் மகிழ்ச்சி
1 hour(s) ago | 1
புதுடில்லி: 2025ம் ஆண்டில் கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா தொற்று காரணமாக, 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 42 பேர் உயிரிழந்தனர் என பார்லிமென்டில் மத்திய சுகாதார அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் தெரிவித்தார்.இது தொடர்பாக, லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக, மத்திய சுகாதார அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் கூறியதாவது; 2023ம் ஆண்டில் மூளையை உண்ணும் அமீபா தொற்று காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர். 2024ல் அமீபா தொற்று காரணமாக 39 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். நடப்பு 2025ம் ஆண்டில், 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 42 பேர் உயிரிழந்தனர். கேரளாவில் அமீபா தொற்று, அதிகரிப்பை மறு ஆய்வு செய்ய தேசிய மற்றும் மாநில நிபுணர்களுடன் சுகாதார ஆராய்ச்சித் துறை செயலாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் ஜெனரல் ஒரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். கேரள மாநில அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். தொற்று பாதிப்பு அறிகுறிகள் அதிகமாக காணப்படும் இடங்களில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கேரளாவில் மூளையை தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக்காய்ச்சல் அதிகம் காணப்பட்டது. மாசுபட்ட நீரில் வாழும் இந்த அமீபா, மூக்கின் வழியாக மனித மூளைக்குள் நுழைந்து அங்குள்ள திசுக்களை அழித்து வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மாசுபட்ட நீரில் குளிப்பது அல்லது அதில் முகத்தை கழுவுவதன் வாயிலாக அமீபிக் மூளைக்காய்ச்சல் பரவி உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. காய்ச்சல், சளி, தலைவலி, வாந்தி போன்றவை தான் அமீபிக் மூளைக்காய்ச்சலுக்கு அறிகுறிகள் ஆகும்.
1 hour(s) ago | 1