உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலின் வீட்டு முகவரி மாறுகிறது!

ராகுலின் வீட்டு முகவரி மாறுகிறது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, சுனேஹ்ரி பாக் சாலையில் புது வீடு ஒன்றை ஒதுக்கீடு செய்து லோக்சபா குழு பரிந்துரை செய்துள்ளது. இது குறித்து ராகுல், இன்னும் பதிலளிக்கவில்லை எனக்கூறப்படுகிறது.லோக்சபா எம்.பி., ஆனது முதல் ராகுல் டில்லியில், 12, துக்ளக் லேன் என்ற முகவரி கொண்ட வீட்டில் வசித்து வந்தார். அவதூறு வழக்கில் தகுதியிழப்பு செய்யப்பட்டதால் அந்த வீட்டை காலி செய்த ராகுல், ஜன்பத் சாலையில் வசிக்கும் தாயார் சோனியாவுடன் வசித்து வந்தார். தகுதி நீக்கம் நிறுத்தி வைக்கப்பட்டாலும், வேறு வீட்டிற்கு ராகுல் மாறவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற ராகுல், தற்போது எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ளார். மத்திய அமைச்சர் அந்தஸ்துக்கு இணையான இந்த பதவியில் அவர் உள்ளதால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் வீட்டை போல், ராகுலுக்கும் ஒதுக்கப்படும்.இந்நிலையில், சுனேஹ்ரி பாக் சாலையில் உள்ள எண் 5 கொண்ட பங்களாவை ராகுலுக்கு ஒதுக்க லோக்சபா குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த வீட்டை அவரது சகோதரி பிரியங்கா நேரில் பார்வையிட்டு சென்றுள்ளார். இதனால், காங்., தொண்டர்கள் மத்தியில் இந்த வீடு குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேநேரத்தில் இந்த வீட்டை ஏற்பது குறித்து ராகுல் இன்னும் பதிலளிக்கவில்லை என டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

G Mahalingam
ஜூலை 27, 2024 09:57

அங்கேயே இருக்கட்டும். அப்போது சோனியா சாதாரண உறுப்பினர். அவருக்கு இவ்வளவு பெரிய வீடு தேவை இல்லை


Iniyan
ஜூலை 26, 2024 20:43

இத்தாலி வீட்டுக்கு போக சொல்லுங்க . கொஞ்சம் இந்த கொசு தொல்லை இல்லாமல் இருக்கலாம்


sankaranarayanan
ஜூலை 26, 2024 20:20

பப்பு ஒரு ஒண்டிக்கட்டைதானே வீணாக அரசுக்கு எதற்கு செலவு பேசாமல் ஒரு தங்கு விடுதியில் ஒரு அறை உள்ள இடமாக எடுத்து தங்கினால் தேசத்திற்கும் நல்லது இருக்கும் நல்லது


Venkat
ஜூலை 26, 2024 19:46

Thuglak should stay in Thuglak lane


Ramesh Sargam
ஜூலை 26, 2024 18:32

ஏன்? ராகுல் பாட்டி வீட்டுக்கு இத்தாலி செல்கிறாரா… ஒரேயடியாக…?


ஆரூர் ரங்
ஜூலை 26, 2024 17:52

வீணான செலவு எதற்கு? அம்மாவுக்கும் மகனுக்கும் தனித்தனி வீடுகள் எதற்கு? காந்திக் கட்சி ன்னு பெருமை வேற.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 26, 2024 22:37

இவரு பண்ணுறதெல்லாம் இவரு அம்மாவுக்குத் தெரியக்கூடாது .... அவங்க பண்ணுறதெல்லாம் இவருக்குத் தெரியக்கூடாது .....


என்றும் இந்தியன்
ஜூலை 26, 2024 17:38

ராகுல் டில்லியில், 12, துக்ளக் லேன் என்ற முகவரி ???இது தான் ராகுலுக்கு - துக்ளக் பொருத்தமான இடம்


மேலும் செய்திகள்









புதிய வீடியோ