உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறையில் இறப்பதே மேல்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் கண்ணீர்

சிறையில் இறப்பதே மேல்: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் கண்ணீர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: கனரா வங்கிக்கு, 538 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனர் நரேஷ் கோயல், 74, மும்பை நீதிமன்றத்தில் ஆஜரான போது, கூப்பிய கரங்களுடன், ''நான் நம்பிக்கையை இழந்துவிட்டேன், தற்போதுள்ள நிலையில் நான் சிறையில் இறப்பதே மேல்,'' என, கண்ணீர் மல்க குறிப்பிட்டுள்ளார்.நம் நாட்டில் முன்னணி நிறுவனமாக இருந்த, 'ஜெட் ஏர்வேஸ்' விமான சேவை நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்ததை அடுத்து, கடந்த 2019ல் விமான சேவையை முழுமையாக நிறுத்தியது.

சோதனை

இதற்கிடையே, வங்கியிலிருந்து கடன் பெற்று மோசடி செய்த வழக்குத் தொடர்பாக, அதன் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியது.இதற்கிடையே, கனரா வங்கிக்கு, 538 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகிகளுக்கு எதிராக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான பண மோசடி வழக்கில், கடந்த ஆண்டு செப்., 1ல் மும்பையில் நரேஷ் கோயலை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். தற்போது அவர், நீதிமன்ற காவலில், மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதுதொடர்பான வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், நரேஷ் கோயல் தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணைக்காக, சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன் நேற்று முன்தினம் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர்.அப்போது தன்னிடம் தனியாக விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என நீதிபதியிடம் அவர் கோரினார். இதற்கு நீதிபதி அனுமதி அளித்த நிலையில், நரேஷ் கோயல், கூப்பிய கரங்களுடன் மொத்த உடலும் நடுங்கியபடி, 'என் உடல்நலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது' என, தெரிவித்தார்.

நீதிபதியிடம் அவர் தொடர்ந்து கூறியதாவது:

என் மனைவி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். அவரை, உடல்நலம் பாதிக்கப்பட்ட என் ஒரே மகள் பராமரித்து வருகிறார். என் கால் முட்டியில் வீக்கம் உள்ளது. இதனால் மடக்க முடியாத அளவுக்கு வலி உள்ளது. சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுகிறது, சில சமயங்களில் சிறுநீருடன் ரத்தம் வருகிறது.என்னை மருத்துவமனையில் அனுமதிப்பதால் எந்த பயனும் இல்லை. மருத்துவமனைக்கு சென்றாலும், பல அசவுகரியங்களை சந்திக்க நேர்கிறது. இதனால், என் உடல்நலன் மிகவும் பாதிக்கப்படுகிறது.

நடவடிக்கை

தற்போதுள்ள சூழலில் நான் நம்பிக்கை இழந்து விட்டேன், உயிர் வாழ்வதை விட சிறையில் இறப்பதே மேல். என்னை மருத்துவமனைக்கு அனுப்பாமல் சிறையில் மரணிக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.நரேஷ் கோயல் தெரிவித்த கருத்துக்களை பதிவு செய்த நீதிபதி, ''அவரது உடல்நலனை பாதுகாக்க தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்'' என, அவரது வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.இதற்கிடையே, நரேஷ் கோயலின் ஜாமின் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது, இவ்வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

sridharan RAMDAS
ஜன 08, 2024 22:59

ஒருவர் தொழில் தொடங்க கடன் வாங்கிய பிறகு தொழில் நஷ்டமடைந்தால், எப்படி கிரிமினல் ஆக முடியும்? Bankruptcy protection kidaikkaathaa?


duruvasar
ஜன 08, 2024 15:58

பாயசம் சாப்பிடுவதற்கு முன் நினைத்திருக்க வேண்டியாது.


Vijay Kumar
ஜன 08, 2024 15:38

இப்ராஹிம் பணத்தை கொண்டு வியாபாரம் செய்து அது ஒரு கால கட்டத்தில் நின்று விட, தொடர்ந்து விமான சேவைகளை தொடர முடியாமல் கடன் வாங்கி இப்போது இந்த நிலைக்கு ஆளாகி விட்டார்.


jss
ஜன 08, 2024 14:17

திமுகவில் சேர்ந்து விடுங்கள். இம்மாதிரி மோசடிகளுக்கு சரியான இடம் அதுதான். உங்களுக்கு இலாகா இல்லா ம்ந்திரி பதவி கிடைக்கும் அதனால் சிறையில் ராஜவாழ்க்கை வாழலாம். எந்த விதமான மொசடிகளின் ஒரே புகலிடம் திமுகதான்.


Thiruvenkadam
ஜன 08, 2024 20:45

பாஜகவில் சேர்ந்துவிட்டால் வழக்குகள் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும். விஜய் மல்லையா, முகுல்சோக்சி, நீரவ் மோடி தப்பித்து ஓடி பல வருடங்கள் ஆகிவிட்டது. அவர்களை பிடித்து வர இந்த ஒன்றிய அரசுக்கு யோக்கிதை இல்லை. ஒன்றிய அரசின் ஒத்துழைப்புடன் ஓடியவர்களை எப்படி கொண்டுவருவார்கள்.


R.RAMACHANDRAN
ஜன 08, 2024 13:53

நூற்றுக்கணக்கான அல்லது ஆயிர கணக்கான கோடிகள் வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்பவர்களெல்லாம் வயது முதிர்ந்தவர்களாகவே உள்ளனர்.அவரகள் இறப்பதற்கு முன் தொகையை வசூலிப்பதும் இல்லை தண்டனை பெறச்செய்வதும் இல்லை இதில் கடன் வழங்கிய வாங்கி ஊழியர்களுக்கும் பங்குண்டு என்பதால்.


Thiruvenkadam
ஜன 08, 2024 20:46

இதுவே அம்பானி,அதானி என்றால் பல லட்சம் கோடி கடனாக இருந்தாலும் தள்ளுபடி செய்யப்படும். குசராத்திகளுக்கு காட்டப்படும் சலுகை வேறு யாருக்கும் இல்லை.


Sridhar
ஜன 08, 2024 13:17

இப்படி ஒரு நேர்மையான அரசு நாளை வரும், நம்மை பிடித்து உள்ளே வைக்கும் என்று எதிர்பார்ப்பு இல்லாமல், எல்லா கொள்ளைகளையும் செய்திருப்பார்கள். ஹ்ம் பாவம், இந்த மாதிரி இப்போ வெளியே சுத்தும் நிறையபேருக்கு நாளைக்கு ஆப்பு காத்துட்டிருக்கு. அவங்கெல்லாம் என்ன செய்யப்போறாங்க?


ஆரூர் ரங்
ஜன 08, 2024 12:55

வணிகத்தில் 80 சதவீதம் பேர் தோல்வியடைந்து கடனைக் கட்ட முடியாமல் தவிப்பதுண்டு. கடன் பாக்கிக்காக அவர்களனைவரையும்???? சிறைக்கு அனுப்ப முடியுமா? ஏமாற்றும் எண்ணத்துடன் கடன் வாங்கியிருந்தால் மட்டுமே கிரிமினல்.பல கார்பரேட்கள் தீய முக காங் ஆதரவில் வளர்ந்து பின்னர் அவர்களுக்கு கப்பம் கட்டியே திவாலானதும் உண்டு ( கருணாவிடம் உங்களுக்கு பெட்டிகள் கொடுத்தே நான் நொடிந்து போய் விட்டேன் என வீராணம் ஒப்பந்ததாரர் ????‍????அழுதாராம்)


S.V.Srinivasan
ஜன 08, 2024 12:24

இதையெல்லாம் முன்பே யோசித்திருக்க வேண்டும் . மக்கள் பணத்தை வங்கியிலிருந்து கடனாக பெற்று கொண்டு, கடனை அடைக்காமல் இருந்தால் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். தலை விதியை மாற்ற முடியாது.


sivaraman
ஜன 08, 2024 11:37

CHENNAI-MUMBAI-DOHA - 18 Apr 2019 - HCPWVD - Request for refund pending should not have looted public money like me and various Mr.Naresh Goel


D.Ambujavalli
ஜன 08, 2024 11:34

இவர். செப்டெம்பரில்தானே கைதாகி இருக்கிறார் இவருக்கு 'சீனியர்'. புழலில் இருந்து ஜமீனுக்கு முட்டி மோதுகிறார் கொஞ்சம் நாள் பொறுக்கட்டும் மக்கள் பணத்தைக் கொள்ளையடிக்கும்போது தெரியாத வயதும், இல்லாத நோய்களும் சிறை சென்றதும் வந்துவிகிறதே


மேலும் செய்திகள்











புதிய வீடியோ