உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதிபதியுடன் தகராறு வழக்கறிஞர்கள் மீது தடியடி

நீதிபதியுடன் தகராறு வழக்கறிஞர்கள் மீது தடியடி

காஜியாபாத் :உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத் நீதிமன்றத்தில் நீதிபதியின் அறையை முற்றுகையிட்ட வழக்கறிஞர்களை, போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.உ.பி.,யில் காஜியாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் மனு விசாரணை தொடர்பாக நீதிபதிக்கும், வழக்கறிஞர் ஒருவருக்கும் இடையே நேற்று வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான வழக்கறிஞர்கள் நீதிபதி அறைக்கு சென்று அவரை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக நீதிபதி போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனால், நீதிபதியுடன் வழக்கறிஞர்கள் மோதலில் ஈடுபட்டனர். போலீஸ் உயரதிகாரிகள் தலைமையில் வந்த போலீஸ் படையினர், நீதிபதி அறையை முற்றுகையிட்ட வழக்கறிஞர்களை தடியடி நடத்தியும், நாற்காலிகளை துாக்கி வீசியும் அடித்து விரட்டினர். இதில், வழக்கறிஞர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள், நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் முகாம்களை அடித்து நொறுக்கினர். நீதிபதிக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கம் இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதேபோல் வழக்கறிஞர்களின் செயலை கண்டித்து, நீதிபதிகள் நேற்று பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Mohan Loganathan
அக் 31, 2024 19:18

பல ஆண்டுக்களுக்கு முன் சென்னை மாஜிஸ்திரேட் அகங்காரமாக செயல்பட்டதால் வழக்கறிஞர்கள் சங்கம் தலைவர் மற்ற வழக்கறிஞர்கள் மாஜிஸ்டிரேட்டின் நீதி மன்றத்தை பூட்டி அவரை சிறை வைத்தனர் அவர்கள் மீது தடியடி நடத்தப் படவில்லை உயர் நீதிமன்றம் அந்த வழக்கறிஞர்களை நீதி மன்ற அவமதிப்பு என்று தண்டித்தார்கள் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் ஒருவருக்கு ஒருவர் ஒத்து உழைப்பு தர வேண்டும்..இதை வெட்ட வெளிச்சம் ஆக்கக் கூடாது


M.A. Fajil
அக் 31, 2024 13:52

நீதியை நாடி சமானிய மக்கள் நீதி மன்றம் நாடுகின்றனர் தீர்ப்பு எழுதும் நீதிபதிகள் உரிய தீர்ப்பை வாங்கி கொடுக்கும் வழக்கறிஞர்கள் சண்டை சச்சிறவுகளில் ஈடுபடுவது வருத்தத்திற்கு உரிய செயல்


M.R. Sampath
அக் 31, 2024 13:42

சமீப காலங்களில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் அதிகரித்து வரும் நிலையில் பழக்கமாகவே நேர்மைக்கு மாறாக செயல் படுவதை தங்களது கொள்கையாகக் கொண்ட ஒரு சில மாணவர்கள் சட்டத்தை தவறாக பயன் பாடுவதற்காகவே சட்டப்படிப்பை மேற் கொள்கிறார்கள் என்றுதான் புரிந்து கொள்ளமுடிகிறது. இந்த ஒரு சில நபர்களே ஆர்ப்பாட்டத்திற்கு காரணம். சட்டப் படிப்புக்கு நுழைவுத்தேர்வு மற்றும் நேர்காணலில் உளவியலாளர் பங்கேற்று மேற்படி வக்ர மனநிலை கொண்ட நபர்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


NR Sharavanan
அக் 31, 2024 11:49

சாதி அடிப்படையிலான அரசியல் மற்றும் சாதி அடிப்படையிலான நபர்களுக்கு முன்னுரிமை மற்றும் சாதி அடிப்படையிலான செய்திகள் மற்றும் ஜாதி அடிப்படையிலான கருத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, இவைதான் குழப்பத்திற்கு காரணம்.


govindachari
அக் 30, 2024 18:05

நீதித்துறை சமூக விரோதிகளின் கையில் சிக்கி பல வருடங்கள் ஆகின்றது.


Common Man
அக் 30, 2024 13:09

முற்றுகை, மோதலில் ஈடுபட்ட அனைத்து வக்கீல்களின் பார் கவுன்சில் பதிவை 5 ஆண்டுகளுக்கு நீக்க வேண்டும். வக்கீல்கள் குண்டர்கள் ஆவது ஏற்க இயலாது. நீதிபதி தவறு செய்திருந்தால், அதை முறையாக மேல் முறையீடு செய்து களைந்திருக்க வேண்டுமேயன்றி வக்கீல்கள் சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு நீதிபதிகளை மிரட்டுவதை ஏற்க இயலாது.


K. Loganathan Kanthan
அக் 30, 2024 08:58

எல்லாம் அவன் செயல்


R.RAMACHANDRAN
அக் 30, 2024 07:49

இந்த நாட்டில் நீதிபதிகளும் வழக்கறிஞ்சர்களும் குற்றம் புரிவதில் அவளுள்ளவர்களாக உள்ளதால் சாமானியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை