உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 10 மாத குழந்தை உட்பட 3 பேர் பலி

காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து; 10 மாத குழந்தை உட்பட 3 பேர் பலி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், 10 மாத குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில், ஆறு பேருடன் கார் ஒன்று சென்று கொண்டிருந்நது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது.இதில், 10 மாத குழந்தை உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூவர் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை