உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேரள முதல்வர் மகள் மீதான வழக்கு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கேரள முதல்வர் மகள் மீதான வழக்கு: மத்திய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

கொச்சி: கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் முறைகேடுகள் குறித்து நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.கேரளா முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா கொச்சியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை நடத்தி வருகிறார். கொச்சி தாது நிறுவனத்துக்கு சேவைகள் வழங்குவதற்காக இவரது நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.ஆனால், எந்த சேவையும் வழங்காமல், 2017 முதல் 2020ம் ஆண்டுகள் வரை 1.72 கோடி ரூபாய் வீணாவின் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. இது, அரசியல் ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இவ்விவகாரம் தொடர்பாக கொச்சி தாது நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், அரசியல்வாதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின.இதையடுத்து, பினராயி விஜயனின் மகள் வீணாவின் அலுவலகத்தில் கம்பெனி சட்டத்தின் கீழ் மத்திய அரசு சமீபத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கிடையே, மதசார்பற்ற கேரள ஜனபக் ஷம் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பி.சி.ஜார்ஜின் மகனும் வழக்கறிஞருமான ஷோன் ஜார்ஜ் என்பவர், வீணாவின் நிறுவனத்தை நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்துவதுடன், அந்நிறுவனத்திற்கு எதிராக எஸ்.எப்.ஐ.ஓ., எனப்படும் தீவிர மோசடி விசாரணை அலுவலக பிரிவின் ஆய்வுக்கு உட்படுத்தக்கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ''கம்பெனி சட்டத்தின் பிரிவு 210ன் கீழ் அந்நிறுவனத்தின் மீது விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுஉள்ளது. ''அடுத்த விசாரணையின்போது, இவ்விவகாரத்தில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அனுமதியுங்கள்'' என, கேட்டுக்கொண்டார்.இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தேவன் ராமச்சந்திரன், இதுதொடர்பான ஆவணங்களை வரும் 19ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.இதேபோல் இவ்வழக்கின் எதிர்மனுதாரர்களாக முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா, அவரது நிறுவனம், கொச்சி தாது நிறுவனம் மற்றும் கேரள மாநில தொழில் மேம்பாட்டு நிறுவனம் ஆகியோரையும் இணைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நரேந்திர பாரதி
ஜன 17, 2024 13:22

இந்தியாவில் பரம்பரை பரம்பரையாக மக்களை கொத்தடிமையாக வைத்திருக்கும் வாரிசு அரசியலின் கேவலத்தை பாரீர்


hindu sanatani
ஜன 17, 2024 06:52

அது சரி.. பிஜேபி ஆட்சியில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் தான் பிரச்சனை..


Bhakt
ஜன 16, 2024 22:29

கம்யூனிசம் தீவிர வியாதியத்தை விட கொடூரமானது.


sankaranarayanan
ஜன 16, 2024 22:03

இதுதான் கம்யூனிஸ்ட் ஆட்சியின் அலங்கோலமா இனி எல்லாமே வெளிவரும் குடும்ப கம்யூனிஸ்ட் ஆட்சி கேரளாவில் நடக்கும் அக்கிரமங்களுக்கு மக்கள் விழித்தெழுக்க வேண்டும்


ganesha
ஜன 16, 2024 21:46

அதான் வாயை திறக்காம இருக்காறோ ????????????


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி