உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவத்திலும் ஜாதி ஆதிக்கம்: ராகுல் பேச்சால் சர்ச்சை

ராணுவத்திலும் ஜாதி ஆதிக்கம்: ராகுல் பேச்சால் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: '' நாட்டில் 10 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மக்களால்( உயர்ஜாதியினரால்) நம் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது,'' என காங்கிரஸ் எம்பி ராகுல் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.பீஹார் சட்டசபைக்கு நாளை மறுநாள் மற்றும் 11ம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று( நவ.,04) மாலையுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் குடும்பா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: நாட்டில் 10 சதவீதம் அளவில் இருக்கும் மக்களால்( உயர்ஜாதியினர்) நம் ராணுவம் கட்டுப்படுத்தப்படுகிறது. 90 சதவீதம் மக்கள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், ஆதிவாசி சமூகங்களை சேர்ந்தவர்கள். ஆனால் இவர்கள் அதிகாரம் மற்றும் வளங்களில் இருந்து விடுபட்டுள்ளனர்.அனைத்து வளங்களும் 10 சதவீதம் பேருக்கு செல்கிறது. அனைத்து வேலைகளும் அவர்களுக்கே செல்கிறது. நீதித்துறையை பார்த்தால், அவர்களே கட்டுப்படுத்துகின்றனர். ராணுவத்திலும் அதுதான் நடக்கிறது. 90 சதவீத மக்கள் எங்களையும் பார்க்க முடிவதில்லை. இவ்வாறு அவர் பேசினார். ராகுலின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இது தொடர்பாக பாஜ செய்தித்தொடர்பாளர் சுரேஷ் நகுனா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: ராகுல், தற்போது ஆயுதப்படையிலும் ஜாதியை தேடி வருகிறார். 10 சதவீதம் பேர் அதைக் கட்டுப்படுத்துகிறார்கள் என்றும் கூறுகிறார். பிரதமர் மோடி மீதான வெறுப்பில் அவர் ஏற்கனவே இந்தியாவை வெறுப்பதற்கான எல்லையை தாண்டிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Nathansamwi
நவ 06, 2025 07:09

15 வருஷமா தான் பாஜக ஆட்சி பன்றாங்க ...60 வருஷத்துக்கு மேல இவர் குடும்பம் தானே ஆட்சி பண்ணாங்க ?


K V Ramadoss
நவ 05, 2025 20:40

இந்த ராகுல் ஏன் பிதற்றுகிறார் ..அவருக்கு புத்தி சொல்ல காங்கிரசில் யாரும் இல்லையா ? அல்லது தைரியம் இல்லையா ?


பேசும் தமிழன்
நவ 05, 2025 18:57

பப்பு க்கு மறை கழண்டு விட்டது போல் தெரிகிறது..... இருக்காதா பின்னே.... ஒவ்வொரு தேர்தலிலும் நாட்டு மக்கள் பப்பு மற்றும் கான் கிராஸ் கட்சியை விரட்டி விரட்டி அடிப்பதால்..... பதவி கிடைக்காத விரக்தியில்.... பதவி வெறியில் வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு திரிகிறார்..... ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறும் நீங்கள்.... வாயை திறந்தாலே ஜாதி வெறி பிடித்து பேசலாமா ???


M Rajaretnam
நவ 05, 2025 14:03

சாதி சமய இட ஒதுக்கீடு அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு அப்புறம் எதை எதிர்பார்க்க முடியும்


ஆரூர் ரங்
நவ 05, 2025 11:55

ராகுல் பிற்பட்டவரா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
நவ 05, 2025 10:34

காங்கிரஸ் கட்சி 10 சதவிகித கட்டுபாட்டில் உள்ளதா அல்லது 90 சதவிகித கட்டுபாட்டில் உள்ளதா. மேதகு ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு ஆதரவு தராத கட்சியின் தலைவர். தமிழர் அதுவும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக உதவி ஜனாதிபதிக்கு ஆதரவு தராத கட்சி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்தவர் இந்த பப்பு என்று அன்புடன் அழைக்கும் ராகுல்.


Venugopal, S
நவ 05, 2025 10:08

இதுக்கெல்லாம் கருத்துக்கள் போட்டு உங்களின் தரத்தை குறைத்துக் கொள்ள வேண்டாம்


palaniappan. s
நவ 05, 2025 10:06

பப்பு, ஏற்கனவே கிரிக்கெட்டில் தலித்கள் இல்லை என்று கூறிவிட்டாரே.


N S
நவ 05, 2025 09:46

மக்களே, கவலைப்படாதீர்கள். அது சில நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்கும் பொழுது வந்த "ஞானோதயம்". சுமைதூக்குபவர்களுடனும், லாரி ஒட்டுநர்களுடனும், விவாசாயிகளுடனும், குப்பை சேகரிப்பவர்களுடனும், வர்ணம் பூசுபவர்களுடனும் ஆட்டம் போட்டு, பின் பல பொன்மொழிகள் உதிர்க்கப்படும்.


vbs manian
நவ 05, 2025 09:26

அடிமடியில் கை வைக்கிறார். கடுமையான நுழைவு தேர்வு பயிற்சியின் மூலமே ராணுவத்தில் சேர்க்கிறார்கள். ஜாதி மதம் பார்ப்பதில்லை. இதிலும் ஜாதி அரசியல் செய்யும் இவர் பற்றி நினைக்கவே வேதனையாக உள்ளது. ராணுவத்தையும் தாக்க முயற்சிக்கிறார். அடுத்து கிரிக்கெட் ஹாக்கி விளையாட்டிலும் ஜாதியை புகுத்தி அரசியல் செய்வாரோ. பாக் சீனா மீது அளவு கடந்த பிரியம். இவர் ஒரு இந்தியா பிரஜைதானா என்று சந்தேகமாக உள்ளது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை