உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.ஐ. வழக்கில் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஆக.27 வரை நீட்டிப்பு

சி.பி.ஐ. வழக்கில் கெஜ்ரிவால் நீதிமன்ற காவல் ஆக.27 வரை நீட்டிப்பு

புதுடில்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் டில்லி முதல்வர் கெஜ்ரிவால் நீதிமன்ற காவலை ஆக.27 வரை நீட்டித்து கோர்ட் உத்தரவிட்டது.டில்லி ஆம் ஆத்மி ஆட்சியில் புதிய மதுபான கொள்கையில் நடந்த முறைகேட்டை சி.பி.ஐ., அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதில் பணமோசடி தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் மார்ச் 21-ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.பின் சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ஜூன் 26-ம் தேதி திகார் சிறையில் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு டில்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இதில் சி.பி.ஐ. வழக்கில் கெஜ்ரிவால் கோர்ட் காவல் நிறைவடைந்த நிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி காவேரி பவேஜா, ஆக.27 வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கல்யாணராமன்
ஆக 20, 2024 22:54

எந்த ஒரு யோக்கியனையும் லோக்கல் போலீஸே அவ்வளவு எளிதில் கைது செய்ய முடியாது. சி பி ஐ கைது செய்துள்ளது என்றால் இன்னமும் இவனை யோக்கியன் என்று எவரும் சப்பை கட்டு கட்டக்கூடாது.


SUBBU,MADURAI
ஆக 20, 2024 19:34

இந்த ஒயிட்காலர் கிரிமினல் கெஜ்ரிவாலை வச்சு செஞ்சி நல்லா நொங்கெடுங்க மாண்பு பொருந்திய கனம் நீதிபதி அவர்களே!


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி