உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தங்க கடத்தலில் அரசு ஊழியர்கள் தொடர்பு: சி.பி.ஐ., விசாரணையை துவக்கியது

தங்க கடத்தலில் அரசு ஊழியர்கள் தொடர்பு: சி.பி.ஐ., விசாரணையை துவக்கியது

புதுடில்லி: துபாயில் இருந்து நம் நாட்டுக்குள் தங்கம் கடத்தி வரப்படும் விவகாரத்தில், அரசு ஊழியர்களுக்கு இருக்கும் தொடர்பு குறித்து சி.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது.

தொடர்கதை

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து, நம் நாட்டுக்கு சட்டவிரோதமாக தங்கம் கடத்தி வரப்படுவது தொடர்கதையாக உள்ளது.சமீபத்தில், துபாயில் இருந்து, 19 கோடி ரூபாய் மதிப்பிலான, 21.28 கிலோ தங்கம் கடத்தி வந்த ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த இருவர், மும்பை விமான நிலையத்தில் கடந்த 6ம் தேதி பிடிபட்டனர். இவர்களும், அடிக்கடி துபாயில் இருந்து மும்பை பயணித்தது தெரியவந்தது.

விசாரணை

இதுபோல துபாயில் இருந்து அதிக அளவிலான தங்கம் கடத்தி வரப்படும் விவகாரத்தில் சர்வதேச கடத்தல் கும்பலின் பங்கு இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளது.விமான நிலையங்களில் பணியாற்றும் மத்திய அரசு ஊழியர்களின் உதவியின்றி இதுபோன்ற தொடர் கடத்தல்கள் சாத்தியமில்லை என்பதால், அதுகுறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வருவாய் புலனாய்வுத் துறை பரிந்துரைத்தது. இதையடுத்து, அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள், தனிநபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள சி.பி.ஐ., விசாரணையை துவக்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Yasararafath
மார் 14, 2025 11:50

அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்


visu
மார் 14, 2025 08:59

ரொம்ப லேட்டா தெரிஞ்சுக்கிறாங்க இது போன்ற எல்லா துறைகளிலும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுகிறது என்ன மத்திய அரசுக்கு மக்களோடு தொடர்பு குறைவு ஊழல் செய்யும் இடங்கள் குறைவு மாநில அரசுக்கு அதிகம்


Iyer
மார் 14, 2025 07:58

மோதி அரசின் - CBI ED மற்றும் பல உலாவத்துறைகள் - தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருக்கின்றன. பெரும் அளவில் ஊழல்கள் செய்தால் பிடிபடுவது 100% நிச்சயம். ஆகையால் இப்போது "ஊழல் அரசியல் வாதிகள்" - தங்கக்கடத்தலில் ஈடுபடுவது - TRENDING - ஆகிக்கொண்டு இருக்கிறது. மம்தா, பினராய் விஜயன், சித்தராமையா போன்றவர்கள் இப்போ - மனம் திருந்தி - தங்கக்கடத்தலில் ஈடுபட்டுள்ளார்கள்.


Iyer
மார் 14, 2025 07:52

மம்தா பேகம் - தன் அமைச்சர்கள் மூலம் செய்த ஊழல்கள் அனைத்தும் பிடிபட்டு விட்டன. ஊழல் செய்த பணத்தையும் மீட்டாச்சு. ஆகையால் மம்தா தன் மருமகள் மூலம் தங்கம் கடத்திவர செய்தார். அதையும் நமது AGENCY பிடித்துவிட்டது.


Iyer
மார் 14, 2025 07:48

அரசு "ஊழியர்கள்" மாத்திரம் அல்ல. "அரசியல்வாதிகள்" பங்கில்லாமல் இதுபோன்ற பெரிய அளவில் தங்கம் கடத்தியிருக்க முடியாது. உத்தமபுத்திரன் சித்தராமையாவின் ஆசீர்வாதம் இருக்கும்போல தான் தெரிகிறது.


Appa V
மார் 14, 2025 06:34

குறிப்பிட்ட அளவு தங்கத்தை வெளிநாட்டில் தங்கியிருந்த காலத்துக்கு தகுந்தாற்போல் அனுமதிக்கலாம் அதற்க்கு மேல் கொண்டுவந்தால் அதற்க்கு ஒரு கட்டணம் வைக்கலாம் அமெரிக்காவில் வேலை செய்பவர்கள் அரபு நாடுகள் வழியாக வந்தால் சந்தேகப்பார்வையுடன் பார்க்கப்படுகிறார்கள்


J.V. Iyer
மார் 14, 2025 04:24

இதுவரை சி.பி.ஐ. , E.D., நடத்திய விசாரணைகள் என்னவாயிற்று? எவ்வளவு பேருக்கு தண்டனை வழங்கினார்கள்? எவ்வளவு பணம் மீட்கப்பட்டது? ஏன் இந்த கண்துடைப்பு? மத்திய அரசு சரியான முறையில் நடவடிக்கை எடுக்க தவறியது ஏன்?


Ray
மார் 14, 2025 05:41

எல்லாம் மீட்கப் பட்டு விட்டதாம். பலருக்கும் விநியோகித்தாகிவிட்டது. சரியான நடவடிக்கைன்னா என்னான்னே தெரியாமே இன்னுமா? DGCA CISF ல எல்லாரையும் சேர்க்க மாட்டாங்க. அதுக்குன்னு ஸ்பெஷல் தகுதி இருக்காம்.


முக்கிய வீடியோ