உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று மத்திய பட்ஜெட் ; மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?

இன்று மத்திய பட்ஜெட் ; மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?

புதுடில்லி: மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்கிறார். பல்வேறு வரிச்சலுகைகள் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் இடையே எழுந்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=alre2bnt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அதிகாரிகளுடன் ஆலோசனை

இன்று காலை நிதி அமைச்சர் நிர்மலா நிதி அமைச்சக அலுவலகம் வந்தார். இங்கு மூத்த அதிகாரிகளுடன் ஆலோசித்தப்பின்னர் அவர் ஜனாதிபதி மாளிகை புறப்பட்டு சென்றார். இவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக ஆட்சி பொறுப்பை ஏற்ற பின் 2024 - 25ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார்.பல்வேறு துறையினரின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று காலை 11:00 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. குறிப்பாக வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.புதிய வருமான வரி விதிப்பு முறையில் வரி விலக்குக்கான உச்ச வரம்பு, 3 லட்சம் ரூபாயில் இருந்து 4 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், 15 லட்சம் ரூபாய் முதல் 18 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி விதிப்பை, 25 சதவீதமாக மாற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.வரிச்சலுகைகள் முதல், மலிவு விலை வீடுகள் மற்றும் நிலம் தொடர்பாக பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என, ரியல் எஸ்டேட் துறையினர் எதிர்பார்க்கின்றனர்.வீட்டுக் கடன்களுக்கான வட்டி விலக்கு வரம்பை, 2 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்துவது முக்கிய கோரிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Bala
ஜூலை 23, 2024 11:02

waste budget as usual


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 10:46

மக்களின் சராசரி வருமானத்தை விட அரசு ஊழியர்களின் சம்பளம் 20 மடங்கு இருக்கும். எனவே எதிர்கட்சிகள் சம்பளக் குறைப்புக்கு குரல் கொடுப்பார்களா?


Nagarajan D
ஜூலை 23, 2024 10:42

வாய்ப்பே இல்ல ராஜா


Suresh Kesavan
ஜூலை 23, 2024 10:25

மக்களுக்கு உபயோகமாய் ஒன்றுமே இருக்காது..


kulandai kannan
ஜூலை 23, 2024 10:03

மக்கள் விரோத பட்ஜெட் - ராகுல் ஏமாற்றமளிக்கும் பட்ஜெட்- ஸ்டாலின் 2 மணி நேரத்திற்குப் பின் வரப்போகும் செய்தி.


Rajinikanth
ஜூலை 23, 2024 10:50

ஆகா ஓஹோ பட்ஜெட் மக்களை காக்க வந்த பட்ஜெட் - மோடிஜி பெருமிதம். இதுவும் முன்னரே வரும் செய்தி


Kumar Kumzi
ஜூலை 23, 2024 13:09

பத்து லட்சம் ஓவாவுக்கு முயற்சி செய் எதிர்காலம் சூப்பரா இருக்கும்


குருஜி
ஜூலை 23, 2024 09:34

வேலை வாய்ப்பெல்லாம் எதிர்பாக்காதீங்கோ. கார்ப்பரேட்களுக்கு வரிக்.குறைப்பு செய்து உங்களுக்க் நன்மைன்னு அடிச்டு உடுவாங்கோ. போன்சா புறநானூறு, திருக்க்ய்றள்னு கிடைக்க வாய்ப்பு இருக்குங்கோ.


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 10:44

அரசை விட 50 மடங்கு மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிப்பது தனியார் நிறுவனங்கள். அவற்றுக்கு ஊக்கமளித்து உயர்த்துவதில் தவறில்லை. நேரு இந்திரா கூட அரசு, தனியார் இரண்டையும் ஏற்கும் கலப்பு பொருளாதார கொள்கையைத்தான் பின்பற்றினர்.


Kumar Kumzi
ஜூலை 23, 2024 13:14

உனக்கு பத்து லட்சம் ஓவா யோகம் இருக்கு முயற்சி செய்


ஆரூர் ரங்
ஜூலை 23, 2024 09:29

இந்த வருஷம் நல்ல மழை. இலவசங்களை குறைக்க சரியான தருணம். கோதுமையையே இறக்குமதி செய்யும் நிலைமையை இலவசம் உருவாக்கிவிட்டது.


ديفيد رافائيل
ஜூலை 23, 2024 09:18

எவன் budget ready பண்ணானோ அவனை விட்டு படிக்க விடுங்க.


sundarsvpr
ஜூலை 23, 2024 09:12

தின இதழ்கள் புரிந்தகொள்ளவேண்டியது வரவு செலவு திட்டத்தை நோக்குவர்கள் முதலில் எதிர்கட்சிகள் குற்றம் கூற. அரசு ஊழியர்கள் வருமான வரி சலுகை.வணிகர்கள் எவ்வாறு வரி ஏய்ப்பு செய்வது. பொருளாதார நிபுணர்கள் திறனாய்வு தேவையற்றது. நடத்தர மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கருத்துதான் திட்டத்தின் ஆக்க பூர்வம் வெளிவரும். இதனை செய்யவில்லையெனின் இவர்கள் தினசரி படிக்கும் ஆர்வம் குறையும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை