உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.738 கோடி வருமானம் ஈட்டிய சந்திரசேகர ராவ் கட்சி: மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு?

ரூ.738 கோடி வருமானம் ஈட்டிய சந்திரசேகர ராவ் கட்சி: மற்ற கட்சிகளுக்கு எவ்வளவு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி : 'கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதி, 737.67 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது' என, ஏ.டி.ஆர்., எனப்படும், ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள 57 மாநில கட்சிகளில், 39 கட்சிகள், 2022 - 23ம் நிதியாண்டில் ஈட்டிய வருமானம், செலவு குறித்த அறிக்கையை, ஏ.டி.ஆர்., வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 39 மாநில கட்சிகளில், 2022 - 23ம் நிதியாண்டில், தெலுங்கானாவின் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்ட்ர சமிதி, 737.67 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளது.இதைத் தொடர்ந்து, திரிணமுல் காங்., 333.45 கோடி ரூபாய்; தி.மு.க., 214.35 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், தேர்தல் பத்திரங்கள். அதிக செலவு செய்த கட்சிகளில், 181.18 கோடி ரூபாயுடன், திரிணமுல் காங்., முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து, ஒய்.எஸ்.ஆர்-.காங்., 79.32 கோடி ரூபாய்; பி.ஆர்.எஸ்., 57.47 கோடி ரூபாய்; தி.மு.க., 52.62 கோடி ரூபாய் மற்றும் சமாஜ்வாதி 31.41 கோடி ரூபாய் செலவிட்டுள்ளன.

செலவு

ஆண்டு தணிக்கை கணக்குகளை சமர்ப்பிக்க, தேர்தல் கமிஷன் விதித்த காலக்கெடுவை தாண்டி, 23 கட்சிகள் தாமதமாக சமர்ப்பித்துள்ளன. சிவசேனா, போடோலாந்து மக்கள் முன்னணி, தேசிய மாநாட்டு கட்சி, தேசியவாத காங்கிரஸ் உட்பட, 18 பிராந்தியக் கட்சிகளின் தணிக்கை அறிக்கைகள், ஆய்வின் போது தேர்தல் கமிஷன் இணையதளத்தில் கிடைக்கவில்லை.தங்கள் வருமானத்தை விட, 20 கட்சிகள் அதிகமாக செலவழித்துள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தளம் வருமானத்தை விட, 490.43 சதவீதம் அதிகமாக செலவு செய்துள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

sundarsvpr
ஜூலை 20, 2024 17:14

உழைத்து பெறுவது கூலி. இதனை தானம் என்று கூறக்கூடாது. அரசியல் கட்சிகள் உழைத்து தொகை பெறுவதால் தானம். தானம் பெறுபவன் கை தாழ்ந்து இருக்கும். அரசியல் கட்சிகள்எவ்வளவு பெற்றாலும் சாதனை அல்ல. தாழ்ந்த கை. அரசு மக்களுக்கு வழங்கும் இலவசத்தை பெறுவதும் தானம் தான். மக்கள் பெறுவது கூலி அல்ல.


Duruvesan
ஜூலை 20, 2024 15:30

ஆக நமக்கு வாங்கி தான் பழக்கம், குடுத்து இல்லை, என விடியல் கூவல்.


venugopal s
ஜூலை 20, 2024 13:40

தேர்தல் பத்திரம் மூலம் பாஜக கோடு போட்டார்கள், மற்ற கட்சிகள் ரோடு போட்டு விட்டார்கள்!


RAJ
ஜூலை 20, 2024 11:33

Wow. You divided andrapradesh for this purpose and achieved.


Rengaraj
ஜூலை 20, 2024 10:59

திராவிட முன்னேற்ற கழகத்துக்கு வருமானம் 214 கோடி செலவு 52 கோடி மாநில கட்சி இவ்வளவு வருமானம் ஈட்டிவேண்டிய கட்டாயம் எதற்கு. என்று யாரும் கேள்வி கேட்க கூடாது. மத்திய பாஜக தேர்தல் பத்திரம் மூலம் வருமானம் ஈட்டினால் அது குற்றம். சமூக நீதிப்படி மொத்த வருமானத்தில் தொண்ணூறு சதவீதம் மாநிலங்களுக்கு பிரித்து தரவேண்டும் என்றுகூட சொல்வார்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 20, 2024 10:49

அப்போ லாட்டரி கிங் விடியல் கழகத்திற்கு கணக்கில் வராத ரொக்கமாகவே கொடுக்கிறாரா?


Rengaraj
ஜூலை 20, 2024 10:13

தி மு க வுக்கு வருமானம் 125 கோடி . செலவுதான் 52 கோடி


selvam
ஜூலை 20, 2024 09:28

திமுகவுக்வே 52.62 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.. மாநில கட்சிக்கு இவ்வளவு வருமானமா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை