வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தீவிரவாதம் இந்தியாவை அழிக்காமல் பகவான் விஷ்ணுதான் காக்கவேண்டும்.
மேலும் செய்திகள்
'நடிகர்' ஆக மேயர்; 'சீட்' பெற பா.ஜ., 'பிரேயர்'
15-Apr-2025
டேராடுன்: அட்சய திரிதியை நாளான நேற்று, 'சார் தாம் யாத்திரை' துவங்கியதையடுத்து, இமயமலையில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்கள் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்பட்டன.உத்தரகாண்ட் மாநிலத்தில், இமயமலையின் கர்வால் பகுதியில் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு புனித தலங்கள் அமைந்துள்ளன. ஆண்டுதோறும், ஏப்ரல், மே மாதங்களில், இந்த நான்கு கோவில்களுக்கும், 'சார் தாம் யாத்திரை' என்ற பெயரில் ஹிந்துக்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம். கடந்த ஆண்டு, யாத்திரையில் கேதார்நாத்தில் கடும் மழை பெய்தபோதிலும், 48 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர்.இந்த ஆண்டு, அட்சய திரிதியை நாளான நேற்று, 'சார் தாம் யாத்திரை' துவங்கியது. கங்கோத்ரி கோவில், வேத மந்திரங்கள் முழங்க, நேற்று காலை 10:30 மணிக்கு திறக்கப்பட்டது. யமுனோத்ரி கோவில் நடை காலை 11:55 மணிக்கு திறக்கப்பட்டது. இரண்டு கோவில்களிலும் நடந்த சிறப்பு பூஜையில் உத்தரகாண்ட் முதல்வரான பா.ஜ.,வைச் சேர்ந்த புஷ்கர் சிங் தாமி பங்கேற்றார்.இரண்டு கோவில்களைத் தொடர்ந்து, கேதார்நாத் கோவில் நாளை திறக்கப்படுகிறது. அதன்பிறகு, பத்ரிநாத் கோவில் மே 4ல் திறக்கப்படும். குளிர்காலத்தில் இந்த நான்கு கோவில்களும் மூடப்பட்டிருக்கும் நிலையில், தற்போது, 'சார் தாம் யாத்திரை'க்காக திறக்கப்படுகின்றன. இந்த ஆண்டு யாத்திரைக்கு, 22 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாகவும், 60 லட்சம் பேர் வரை வருவார்கள் எனவும் உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது.'சார் தாம் யாத்திரை'யையொட்டி, 6,000 போலீசார், 17 கம்பெனி ஆயுதப்படை போலீசார், 10 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். விபத்துகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்ட 65 இடங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.
தீவிரவாதம் இந்தியாவை அழிக்காமல் பகவான் விஷ்ணுதான் காக்கவேண்டும்.
15-Apr-2025