உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னை - விளாடிவோஸ்டாக் புதிய வழித்தடம் அமைக்க திட்டம்

சென்னை - விளாடிவோஸ்டாக் புதிய வழித்தடம் அமைக்க திட்டம்

புதுடில்லி: பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தில், சென்னை- - விளாடிவோஸ்டாக் கடல்வழி சரக்கு போக்குவரத்து வழித்தடத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான போர் சூழல், சரக்கு கப்பல்கள் மீது பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதல்கள் ஆகியவை சர்வதேச வர்த்தகத்திற்கு பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றன.இதனால், 10,458 கி.மீ., தொலைவு கொண்ட சென்னை -- விளாடிவோஸ்டாக் வழித்தடத்தைச் செயல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.இந்த வழித்தடம், ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இருக்கும் முக்கிய நகரமான விளாடிவோஸ்டாக் துறைமுகத்தையும், இந்தியாவின் தென்கிழக்கு துறைமுக மையமாக இருக்கும் சென்னையையும் இணைக்கும்.இத்திட்டம், இந்தியா -- ரஷ்யா இடையிலான இருதரப்பு பொருளாதார ஒப்பந்தத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த கடல் வழித்தடத் திட்டம், 2019 செப்டம்பரில் முன்மொழியப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, விளாடிவோஸ்டாக்கில் நடந்த கிழக்கு பொருளாதார மன்ற கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது, இந்தியா - ரஷ்யா இடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, சென்னை துறைமுகத்திற்கும், விளாடிவோஸ்டாக் துறைமுகத்திற்கும் இடையே கடல் வழித்தடம் அமைக்கப்படும். இதன் வாயிலாக, நிலக்கரி, எண்ணெய், திரவ இயற்கை எரிவாயு, உரங்கள், கொள்கலன்கள் மற்றும் இரு நாடுகளுக்கிடையேயான இருதரப்பு வர்த்தகத்தில், ஏற்கனவே ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்பட்டு வரும் பிற சரக்குகளையும் கையாள முடியும். கொரோனா காரணமாக, 2022 வரை, இத்திட்டத்தில் எந்த முன்னேற்றமும் காணப்படவில்லை. தொடர்ந்து, ரஷ்யா - உக்ரைன் போரால், இது குறித்த பேச்சு முடங்கியது. பிரதமர் மோடியின் ரஷ்ய பயணத்தால், தற்போது இந்த வழித்தடத் திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால், சென்னை முக்கிய துறைமுகமாக மாறுவது மட்டுமின்றி, 10 நாடுகளில் இருந்து பொருட்களை குறைந்த கட்டணத்தில் இறக்குமதி செய்ய முடியும். இதனால், சென்னையில் சரக்கு போக்குவரத்து அதிகரிப்பதுடன், அதிகளவில் உற்பத்தி தொழிற்சாலைகள், வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி ஆகியவை உயரும்.ஏற்கனவே, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலிருந்து, நம் நாட்டின் மும்பை துறைமுகத்துக்கு கடல்வழி சரக்கு போக்குவரத்து வழித்தட திட்டம் பயன்பாட்டில் உள்ளது.16,066 கி.மீ., துாரம் உடையது. இந்த இரு நகரங்களை அடைய, 40 நாட்கள் பயணிக்க வேண்டியிருக்கும். ஆனால், விளாடிவோஸ்டாக் - சென்னை இடையிலான பயண காலம், 24 நாட்கள் மட்டுமே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

நிக்கோல்தாம்சன்
ஜூலை 12, 2024 08:35

BSNL ஏர்செல் என்று மூழ்கடித்த கட்டுமரம் மறந்துவிட்டதோ? நேற்றுகாலையில் 200 ரூபாயை விட்டெறிந்தார்களா இல்லை ???


Easwar Kamal
ஜூலை 10, 2024 17:11

அருமையான திட்டம். இப்போதான் இந்த திட்டம் கண்ணனுக்கு தெரிஞ்சதை? இந்தியா என்று பாருங்கள் தமிழ்நாடு என்று பார்த்தால் இந்த திட்டம் வேண்டாம் என்றுதான் தோன்றும்.


RAJKUMAR
ஜூலை 10, 2024 11:25

பம்பின் உரிமையாளர் யார் என்பது உலகம் அறிந்தது, நீங்கள் சொல்வது சரிதான்


Kassalioppilan
ஜூலை 10, 2024 06:31

அருமை


Kassalioppilan
ஜூலை 10, 2024 06:27

அருமையான முயற்சி சீக்கிரம் நிறைவேறினால் நல்லது.


Kassalioppilan
ஜூலை 10, 2024 06:25

அருமையான முயற்சி


Anonymous
ஜூலை 09, 2024 17:01

கடைசி வரைக்கும் அம்பானி அதானி னு சொல்லிகிட்டே இருந்தா எப்படி ஐயங்கார் அவர்களே, சட்டுபுட்டு னு கேஸ் போடுங்க, உண்மைய நிரூபணம் பண்ணுங்க. 200ரூவா உடன்பிறப்பு இல்லைனு காட்டுங்க. சும்மா அம்பானி, அதானி னு பஜனை பாடிகிட்டு இருந்தா எப்படி. நிரூபணம் பண்ண முடியலையா, அமைதியா இருந்துட்டு போங்க.


subramanian
ஜூலை 09, 2024 14:50

எங்கள் விஸ்வகுரு மோடிஜி , நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறார். திட்டம் வெற்றிகரமாக நடத்தி, பாரதத்தை வல்லரசாக ஆக்குவதே அவர் நோக்கம்.


thangavel
ஜூலை 09, 2024 13:19

விளாடிவோஸ்டாக் செயின்ட்பீட்டர்ஸ்பர்க் தூரம் எவ்வளவு பயண நேரம் எத்தனை


Velan Iyengaar
ஜூலை 09, 2024 12:56

ஒரு நிறுவனத்துக்காகவா என்பது எவ்வளவு வெள்ளயாக மாறுது என்பதை பொறுத்து இருக்காதா இருக்குமா ?? மேலும் அந்த பக்கம் ஒரு நிறுவனம் ... இந்த பக்கம் இன்னொரு நிறுவனம் ......ரெண்டு நிறுவனமும் அந்த அந்த ஆளும் தரப்புக்கு நெருக்கம் ......


Venkatesan
ஜூலை 09, 2024 16:12

பச்சை கண்ணாடி போட்டு பார்த்தா எல்லாம் பச்சை பச்சயா தான் தெரியும். உங்க சகவாசம் அப்புடி.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை