உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சென்னை - மைசூரு வந்தே பாரத் ஜனவரி 31 வரை நீடித்து உத்தரவு

சென்னை - மைசூரு வந்தே பாரத் ஜனவரி 31 வரை நீடித்து உத்தரவு

பெங்களூரு : சென்னை - மைசூரு இடையேயான 'வந்தே பாரத்' வாராந்திர சிறப்பு ரயில், புதன்கிழமைதோறும், வரும் 31ம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, பெங்களூரு மார்க்கமாக, மைசூருக்கு ஏற்கனவே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.பராமரிப்பு பணிக்காக, இந்த ரயில், புதன்கிழமை தவிர, மற்ற நாட்களில் தினமும் இயக்கப்படுகிறது. ஆனால், புதன்கிழமைகளிலும் இயக்கும்படி, பெரும்பாலான பயணியர், ரயில்வே துறையை வலியுறுத்தி வந்தனர். இதனால், கடந்த டிசம்பர் 27ம் தேதி வரை, ஒரு மாதத்துக்கு, புதன்கிழமைகளிலும் வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. பண்டிகை காலம் என்பதால், சேவையை நீடிக்கும்படி பயணியர் மீண்டும் வலியுறுத்தினர்.இதையடுத்து, வரும் 31ம் தேதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது. வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் எண்: 06037 / 06038, வரும் புதன்கிழமைகளான 10, 17, 24, 31ம் தேதிகளில் இயக்கப்பட உள்ளது.அதிகாலை 5:50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, காட்பாடியில் 7:13 மணிக்கும்; கே.எஸ்.ஆர்., பெங்களூரில் 10:10 மணிக்கும் நின்று, மைசூருக்கு பகல் 12:20 மணிக்கு வந்தடையும்.மறு மார்க்கத்தில், மைசூரில் இருந்து, பகல் 1:05 மணிக்கு புறப்பட்டு, கே.எஸ்.ஆர்., பெங்களூரில் 2:50 மணிக்கும்; காட்பாடியில் 5:33 மணிக்கும் நின்று, சென்னை சென்ட்ரலுக்கு, இரவு 7:20 மணிக்கு சென்றடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்