உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் கெஜ்ரிவால் மனு ; உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

முதல்வர் கெஜ்ரிவால் மனு ; உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

புதுடில்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமின் உத்தரவுக்கு தடை விதித்த டில்லி ஐகோர்ட் உத்தரவை எதிர்த்த அப்பீல் மனு மீது சுப்ரீம்கோர்ட் இன்று விசாரணை நடத்துகிறது.மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1 வரை அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி, மே 10ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 2ல் திஹார் சிறையில் சரணடைந்தார். ஜாமின் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்த மனுவை கடந்த 20ல் விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான விடுமுறை கால அமர்வு ஜூன் 21-ம் தேதி ஜாமின் உத்தரவுக்கு தடை விதித்து.ஜாமின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் தரப்பில் அப்பீல் மனு செய்யப்பட்டது, இம்மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Balasubramanian
ஜூன் 26, 2024 10:47

எனக்கு என்னவோ மீண்டும் ஊத்திக்கும் என்று தான் தோன்றுகிறது! சென்ற முறை தில்லி உச்ச நீதிமன்றம் முடிவு சொல்லாத காரணத்தால் திருப்பி அனுப்ப பட்டது! இந்த முறை உச்ச நீதிமன்றம் சட்டப் படி அவர் கைது செல்லும் என்று தீர்ப்பு கூறி இருக்கிறது! கேஜ்ரிவால் அவர்கள் வக்கீல் இதற்குள் ஏதாவது சட்ட ஓட்டை நுணுக்கங்கள் கண்டு பிடிக்காவிட்டால், இந்த முறை உச்ச நீதிமன்றமும் ஜாமீனை தள்ளுபடி செய்ய வாய்ப்பு உண்டு!


rao
ஜூன் 26, 2024 09:59

The Supreme court should desist from taking up the case immediately and should not give special treatment to the Delhi CM petition in hearing.


Kasimani Baskaran
ஜூன் 26, 2024 04:58

ஜாமீன் மனு இவ்வளவு விரைவாக விசாரணைக்கு வருவது இதுதான் முதல் முறை. நேஷனல் ஹெரால்டு வழக்கு போன்ற பல்லாயிரம் கோடி மோசடியையெல்லாம் விசாரிக்க பத்தாண்டு ஆகும். நீதிமன்றம் பொதுமக்களுக்கு சம்பந்தம் இல்லாத ஒரு அமைப்பாக வளர்ந்து வருகிறது.


naranam
ஜூன் 26, 2024 04:40

ஊழல் செய்து மாட்டிகொண்டு சிறையிலிருக்கும் ஒரு கயவனுக்கு என்ன இவ்வளவு செய்தி இவ்வளவு மீடியா கவரேஜ்?


கோபால கிருஷ்ணன்
ஜூன் 26, 2024 03:51

ஒரு வரி செய்திக்கு மூன்று பக்க விளக்கம்....நேரம் விலைமதிக்க முடியாதது....!!!


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை