மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
3 hour(s) ago | 1
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
9 hour(s) ago | 2
தட்சிண கன்னடா,: அனைத்து வயதினருக்கும் கண் பரிசோதனை, கண் கண்ணாடி வழங்கல், கண்புரை அறுவை சிகிச்சை செய்யும் 'ஆஷாகிரண்' திட்டத்தில் எட்டு மாவட்டங்களில் 2.45 லட்சம் கண் கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன.மங்களூரில் நேற்று சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:ஆஷாகிரண் - உங்கள் வீட்டு வாசலில் கண் பராமரிப்பு திட்டத்தின் கீழ், கண் சுகாதார சேவையில் உள்ள இடைவெளியை குறைக்க, இத்திட்டம் முக்கிய பங்காற்றும். சுகாதார ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள், வீடுதோறும் சென்று, அனைத்து வயதினருக்கும் கண் பரிசோதனையை மேற்கொள்வர். பார்வை குறைபாடு
பரிசோதனையின்போது பார்வை குறைபாடு உள்ளவர்கள், இரண்டாம் நிலை பரிசோதனைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். பார்வை குறைபாட்டுக்கு ஏற்ப கண்ணாடி தேவைப்படுவோருக்கு, இத்திட்டத்தின் மூலம், இலவசமாக கண் கண்ணாடி வழங்கப்படும்.கண்புரை நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனை அல்லது பதிவு செய்யப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.முதற்கட்டமாக சிக்கபல்லாபூர், கலபுரகி, ஹாவேரி, சாம்ராஜ்நகர் மாவட்டங்களின் 56 லட்சத்து 59 ஆயிரத்து 36 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 8 லட்சத்து 28 ஆயிரத்து 884 பேருக்கு கண் தொடர்பாக பிரச்னை இருப்பது தெரிந்தது. 2 லட்சத்து 45 ஆயிரத்து 588 பேருக்கு கண் கண்ணாடி வழங்க வேண்டி உள்ளது. இரண்டாம் கட்டம்
இரண்டாம் கட்டமாக சித்ரதுர்கா, மாண்டியா, ராய்ச்சூர், உத்தர கன்னடா மாவட்டங்களில் 52 லட்சத்து 77 ஆயிரத்து 235 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 9 லட்சத்து 43 ஆயிரத்து 398 பேருக்கு கண் தொடர்பான பிரச்னை உள்ளது தெரிய வந்துள்ளது.பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் விழாவை, இன்று முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.அடுத்தகட்டமாக ராம்நகர், யாத்கிர், குடகு, கதக், சிக்கமகளூரு, பீதர், கோலார், பாகல்கோட்டை மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. படிப்படியாக அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
3 hour(s) ago | 1
9 hour(s) ago | 2