உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீன துப்பாக்கி குவியல் அருணாச்சலில் மீட்பு

சீன துப்பாக்கி குவியல் அருணாச்சலில் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இடா நகர்: அருணாச்சல பிரதேச வனப்பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவை சேர்ந்த ஏராளமான துப்பாக்கிகளை பாதுகாப்பு படையினர் மீட்டனர். வடகிழக்கு மாநிலமான அருணாச்சலின் சாங்லாங் மாவட்டத்தில் உள்ள நம்தபா புலிகள் தேசிய பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சீனாவை சேர்ந்த பாரம்பரிய துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவம், அசாம் ரைபிள்ஸ் படையினர், மாவட்ட போலீசார் உதவியுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், மோப்ப நாய்கள், மெட்டல் டிடெக்டர் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தேடுதல் வேட்டையில், ஏராளமான ஆயுதங்கள் சிக்கின. இதில் 10, எம்.கியூ., - 81 வகை சீன பாரம்பரிய துப்பாக்கிகள் மற்றும் 81 ரக தாக்குதல் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவை கடந்த ஆண்டு சரணடைந்த கிழக்கு நாகா தேசிய அரசு ஆயுதக்குழுவினரால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என, நம்பப்படுகிறது. இவற்றை சாங்லாங் பகுதியில் செயல்படும் பல்வேறு இனக்கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆறு மாதங்களாக தேடி வந்த நிலையில், தற்போது பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். ஆயுதக்குவியல் மீட்கப்பட்டதன் வாயிலாக, இந்த பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை