உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடிக்கு எதிராக தாக்கல் செய்த காமெடியன் மனு உள்பட 36 மனு தள்ளுபடி

மோடிக்கு எதிராக தாக்கல் செய்த காமெடியன் மனு உள்பட 36 மனு தள்ளுபடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாரணாசி: பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவருக்கு எதிராக தாக்கல் ஆன 55 மனுக்களில் 36 மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் கமிஷன் இணையதளத்தின் படி பிரதமர் மற்றும் காங்., வேட்பாளர் அஜய்ராய் உள்பட 15 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அப்டேட் செய்யப்பட்டுள்ளது. ஆறு பேர் மட்டுமே களத்தில் உள்ளனர். வரும் ஜூன் 1 ல் கடைசி கட்ட ஓட்டுப்பதிவின் போது வாரணாசியில் தேர்தல் நடக்கிறது. கடந்த செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் டிவி ஷோக்களில் மோடி, ராகுல் போல் மிமிக்கிரி செய்து பிரபலமான ஷியாம் ரங்கீலா வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இதில் தேர்தல் கமிஷன் அரசியல் விளையாட்டு நடத்தியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். அனைத்து ஆவணங்களும் சரியான முறையில் அளித்தும் நிராகரிப்புக்கான உரிய காரணம் இல்லை என்றும் அவர் குறைகூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Chandhra Mouleeswaran MK
மே 16, 2024 15:41

ஏ அப்பா மோடிஜி காமெடியன்னு சொல்லி, ராவுலுப் பப்புவ இப்பிடி மட்டம் தட்டரது நல்லால்லே தம்பீ அந்தப் பட்டத்துக்கும் அதையே முழுநேரத் தொளிலாச் செய்யரத்துக்கும் பொரப்பெடுத்த இந்த ராவுலு வின்சி இருக்கரப்ப இன்னொரு ஆளு வரமுடியும்மா என்னா? "பாரத் ஜூடோ யாத்திரா" பண்ணப்ப ஒங்க ராவுலு சொன்னாரு பாரு, "பவரு, போர்சு" ரண்டையும் பத்தி அட்டட்டட்டடடா என்னா புத்திக் கூருமை என்னா அருவு அப்பரம் கேட்டாரு பாரு, "என்னொட பதிலுகளுக்கு கேள்வியெல்லாம் எங்கே?" இது ஒண்ணு பத்தாதா "பிரபஞ்ச மகா காமெடியன்" அப்டீன்னு ஒரு பட்டம் ஒங்க ராவுலுக்குத் தர்ரதுக்கு?


Syed ghouse basha
மே 16, 2024 15:31

மோடிக்கு செல்வாக்கு இருப்பது உண்மையானால் எதிர்த்து போட்டியிட இத்தனை பேர் முன்வருவார்களா? இத்துணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருக்குமா?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 16, 2024 20:11

செல்வாக்கில்லாமலே வருடம் பிரதம மந்திரியாக இருந்துள்ளார் செல்வாக்கோடு இருந்திருந்தால் சாகும் வரை பிரதமர் தான் ராகுல் காந்தி பிரதமர் கனவு கனவாகவே போயிருக்கும்


N MARIAPPAN
மே 16, 2024 14:23

ஒரு காமெடியனையே தாங்க முடியல


jayvee
மே 16, 2024 13:11

காமெடியன் வில்லனாக மாறிய தருணம்


சாதனா
மே 16, 2024 11:56

இரண்டு காமெடின்கள் போட்டியிட வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் நினைத்ததோ என்னவோ…


தமிழ்வேள்
மே 16, 2024 11:44

உங்க கும்பலை விடவா பெரிய காமெடியன்கள் இருக்கப்போகிறார்கள் ?


venugopal s
மே 16, 2024 11:04

கடந்த பத்து ஆண்டுகளாக நாட்டை ஆண்டு கொண்டு இருப்பதே ஒரு காமெடியன் தானே!


Venugopal appan loosu
மே 16, 2024 11:49

வேணும்னா உங்க அய்யாவ ஆட்சி செய்ய விடுவோமா


vijay
மே 16, 2024 12:13

தம்பி யாரு காமெடியன் என்று உலகியுர்க்கு தெரியும் அது உனக்கும் தெரியும், வெறுப்பால் நீ பேசுவது கண்டு ஆச்சரியம் இல்லை உலகமாக காமெடிகள் செய்துகொண்டு இருப்பது யாரென்று நான் சொல்ல தேவை இல்லை ஏன் என்றால் எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடக்கிறதே போதாக்குறைக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரொவாய், கிட்டத்தட்ட ஐந்து கோடிக்கும் மேற்பட்ட ஏழை மகளிர்க்கு கொடுப்பார்களாம், மாநிலத்துக்குள்ள எல்லோருக்கும் ஆயிரம் ரொவாய் கொடுக்கறேன் உள்ளிட்டு அப்புறம் தகுதி விதி வச்சுட்டாங்க அதை விட காமெடி என்னவென்றால், குறிப்பிட்ட அளவுக்கு மேல் தங்கம், பணம் வச்சிருந்தால், அதை பிடுங்கி இல்லாதவர்களுக்கு கொடுப்பாராம் இப்படி யார் காமெடி பண்ணுறாங்க என்று உனக்கு தெரிந்திருந்தாலும், உனது பிஜேபி மீதான வெறுப்பு எண்ணத்தினால் மட்டுமே இப்படி பேசுகிறாய் போப்போ போயி இருநூறு ரொவாய்க்கு பதிலா ஆயிரம் இல்லைன்னா ரெண்டாயிரம் வாங்கிக்கொள்


RAMAKRISHNAN NATESAN
மே 16, 2024 13:45

அப்படியென்றால் ஒரு காமெடியனுக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது தேர்தல் பரப்புரையில் அவரைப்பற்றி தொண்ணூறு சதவிகிதம் பேசிய தமிழக முதல்வரை என்ன சொல்லலாம் ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 16, 2024 20:13

காமெடியன்கள் எப்பொழுதும் ரசிகர்களை மகிழ்ச்சியுடன் சிரித்த முகத்துடன் வைத்திருப்பார்கள்


Srinivasan Krishnamoorthi
மே 16, 2024 11:03

எதிர்த்து போட்டியிடுவார் ஒரு திரைப்பட காமெடியன்


ديفيد رافائيل
மே 16, 2024 10:25

"காமடியன்" மனு என்று எப்படி நீங்க சொல்லலாம் ஜெயிப்பது அல்லது தோற்பது என்பது தேர்தல் result அம்ப தான் தெரியும் தகுதி இருந்தால் யார் வேண்டுமானாலும் எந்த இந்தியாவில் உள்ள தொகுதியிலும் போட்டியிலாம்


A1Suresh
மே 16, 2024 10:19

மிகவும் நல்லது இப்படித்தான் இயந்திரத்தனமாக இல்லாமல் மனிதன் போல புத்திசாலித்தனமாக இயங்கவேண்டும் இது தேர்தலா அல்லது காமெடியா நன்று நன்று


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ