உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காமன்வெல்த் பளு தூக்குதல்; தங்கம் வென்று மீராபாய் சானு அசத்தல்

காமன்வெல்த் பளு தூக்குதல்; தங்கம் வென்று மீராபாய் சானு அசத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ஆமதாபாத்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் பளு தூக்குதலில் மீராபாய் சானு தங்கம் வென்றார்.காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் குஜராத்தின் ஆகமதாபாத்தில் இன்று முதல் வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், 30 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rz3l4ncz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தப் போட்டியின் முதல் நாளில் 48 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார். 84 கிலோ + 109 கிலோ என மொத்தம் 193 கிலோ எடையை தூக்கி அவர் இந்த மகுடத்தைச் சூடியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கத்தை வென்ற மீராபாய் சானு, கடந்த ஆண்டு நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் 4வது இடத்தை பிடித்திருந்தார். இந்த நிலையில், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நடப்பாண்டு காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

R. SUKUMAR CHEZHIAN
ஆக 25, 2025 18:21

அருமை மீராபாய் சானு, வாழ்த்துகள்


Ramesh Sargam
ஆக 25, 2025 17:09

அருமை. வாழ்த்துக்கள்.


M. PALANIAPPAN, KERALA
ஆக 25, 2025 17:03

வாழ்த்துக்கள் மீராபாய் சானு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை