உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மோடி மற்றும் ராகுல் மீது புகார்: பா.ஜ., காங்கிரசிடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

மோடி மற்றும் ராகுல் மீது புகார்: பா.ஜ., காங்கிரசிடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பிரசாரத்தின் போது விதிகளை மீறி பேசியது மற்றும் கருத்து தெரிவித்ததாக பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடந்த கூட்டத்தில் பிரதமர் பேசியது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் புகார் அளித்து இருந்தன. ராகுல் மீதும் தேர்தல் விதிமீறல் புகார் கூறப்பட்டது. இதனை பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு அனுப்பி வைத்துள்ள தேர்தல் ஆணையம் அது குறித்து வரும் 29ம் தேதி காலை 11 மணிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=pg5m3zqz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ள நோட்டீசில், உயர் பதவிகளை வகிப்பவர்களின் பிரசார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். தங்கள் வேட்பாளர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சுகளுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகளே பொறுப்பு ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஏப் 25, 2024 16:36

அதிகாரம் இருந்தும் அதை பயன்படுத்தாத அமைப்பு உண்டு என்றால் அது இந்திய தேர்தல் ஆணையம்தான்


Srinivasan Krishnamoorthi
ஏப் 25, 2024 15:05

தேர்தல் ஆணையம் தனி அதிகாரம் உள்ள அமைப்பு தான் இருப்பினும் தேர்தல் கால நடவடிக்கை முடிந்த பின் காற்றில்லாத பலூன் தான் பாதுகாப்பு நிறைந்த வாக்கு பதிவு வாக்கு எண்ணிக்கை தேர்தல் அறிவிப்பு & முடிவு தாண்டி மத மற்றும் கலாச்சாரம் பற்றி அதிகம் உள்நுழைய இயலாது மேலும் சட்டம் சொல்வதை தாண்டி நீதி மன்றங்கள் போல தேர்தல் ஆணையமும் குறிப்பிட்ட வரயரைக்குள் தான் செயல்படும் விளக்கம் என்ன செய்து விடும் என தெரிய வில்லை ஒரு வேலை எச்சரிக்கை தரலாம் காங்கிரஸ் தேர்தலை மிக கவனத்துடன் அணுகுவதாக தெரிய வில்லை உதாரணம்: வேட்பாளர் பரிந்துரை கையொப்பம் போன்றவை மிக அலட்சியத்துடன் சூரத் தொகுதி வேட்பாளரால் கையாளப்பட்டது ஆதிவாசி கட்சிக்கு ஒதுக்கிய தொகுதியில் இருந்து முன்னதாகவே கட்சி சின்னத்துடன் பரிந்துரைக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் மனுவை வாபஸ் வாங்க மறுக்க, தனது கட்சி சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்யும் நிலை


மேலும் செய்திகள்