உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹாராஷ்டிரா அரசியலில் நீடிக்கும் குழப்பம்

மஹாராஷ்டிரா அரசியலில் நீடிக்கும் குழப்பம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹாராஷ்டிரா முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே, நேற்று ராஜினாமா செய்தார். புதிய முதல்வர் பதவியேற்கும் வரை, அவர் காபந்து முதல்வராக தொடர்வார்.மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 288 தொகுதிகளில், 230 இடங்களை ஆளும் மஹாயுதி கூட்டணி கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ., 132 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. சிவசேனா 57 இடங்களையும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் வென்றன.இந்த முறை பா.ஜ., அதிக இடங்களை பெற்றதால், அக்கட்சியைச் சேர்ந்தவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. சிவசேனா தரப்பில் ஏக்நாத் ஷிண்டேவையே மீண்டும் முதல்வராக்க வேண்டும் என கூறப்பட்டது.முதல்வரை தேர்ந்தெடுப்பதில் கூட்டணி கட்சிகளிடையே இழுபறி நீடித்து வருகிறது. முந்தைய சட்டசபைக்கான காலம் நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில், முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டே நேற்று ராஜினாமா செய்தார்.துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னவிஸ், அஜித் பவார் ஆகியோருடன் கவர்னர் மாளிகை சென்ற அவர், ராஜினாமா கடிதத்தை கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணணிடம் வழங்கினார். புதிய முதல்வர் பதவி ஏற்கும் வரை காபந்து முதல்வராக தொடர, ஏக்நாத் ஷிண்டேவை கவர்னர் கேட்டுக்கொண்டார். இதற்கு அவர் ஒப்புக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

xyzabc
நவ 27, 2024 12:56

திராவிட மாடலில் பங்காளி கட்சிகளுக்கு பதவி கிடையாது. எல்லா பாக்கியமும் சிலருக்கு தான்.


முருகன்
நவ 27, 2024 07:55

குழப்பம் ஏற்படுத்த உருவாக்க பட்ட நபர்களால் இன்று அவர்கள் கூட்டணியில் குழப்பம்


karthik
நவ 27, 2024 10:03

தம்பி ஒரு குழப்பமும் இல்ல.. அவர்கள் என்ன முடிவு எடுக்க இருக்கிறார்கள் என்பது உனக்கு தெரியாததால் உனக்கு குழப்பமாக இருக்கிறது. அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் நீ உன் வேலையை பார்


அப்பாவி
நவ 27, 2024 06:46

நம்மாளு விஜயகாந்த்தை இரம் கட்டுன மாதிரி ஷிண்டே கட்டம் கட்டப்படுவாரு. கெடுவான் கேடு நினைப்பான்.


அப்பாவி
நவ 27, 2024 05:58

கெவுனர் பதவிக்கு ஒரு குவாலிபிகேஷனும் தேவையில்லை.


karthik
நவ 27, 2024 10:05

திமுக தலைவராக கருணாநிதி குடும்பம் என்ற தகுதி தவிர வேற ஒன்றும் தேவை இல்லை. நீ அதன் கொத்தடிமையாக இருக்க 200 ரூபாய் போதும் வேறு தகுதி ஒன்றும் தேவை இல்லை.


J.V. Iyer
நவ 27, 2024 04:34

ஏக்நாத் ஷிண்டேவுக்கும், உத்தவ் தாக்கரேவுக்கும் அதிக வேறுபாடு இல்லை. புலியின் வாலைப்பிடித்தால் இப்படித்தான். இதை முன்பே முடிவு செய்திருக்கவேண்டும். அநேகமாக ஏக்நாத் ஷிண்டேதான் தொடருவார்.


Mohan
நவ 27, 2024 10:35

ஷிண்டேவை விட பாட்னவிஸ்க்கே செல்வாக்கு அதிகம் ஆதலால் மக்களால் பிஜேபி கு வெற்றி கிடைத்துள்ளது அது போக இலவசங்களை அறிவித்தது ஷிண்டே அணி பிஜேபி அல்ல இருந்தும் பிஜேபிக்கு வெற்றி கிடைத்துள்ளது ..ஏற்கெனவே பாட்னவிஸ் முதல்வர் பதவியில் இருந்து நல்ல முன்னேற்றத்தை கொடுத்தது மக்களை கவர்ந்துள்ளது தவிர இலவசம் இல்ல ..ஹிந்துக்கள் ஒருங்கிணைப்பு மேலோங்கி உள்ளது மஹாவில் ..மிக எளிமையான மனிதர் எளிதில் அணுகக்கூடியவர் அனால் ஷிண்டே அப்பிடிப்பட்டவர் அல்ல மிகவும் தலைகனம் கொண்டவர் ஆளுமை திரமை அற்றவர்