உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., - எம்.எல்.ஏ., ராஜினாமா மிரட்டல்; சித்து அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு

காங்., - எம்.எல்.ஏ., ராஜினாமா மிரட்டல்; சித்து அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு

பெங்களூரு: “கர்நாடக அரசின் நிர்வாக அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில், என் பதவியை ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை,” என, காங்., - எம்.எல்.ஏ., ராஜு காகே கூறியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வீட்டுவசதி துறையில் வீடுகளை ஒதுக்க லஞ்சம் வாங்கப்படுவதாக, காங்., மூத்த எம்.எல்.ஏ.,வான பி.ஆர்.பாட்டீல் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், பி.ஆர்.பாட்டீலுக்கும், வீட்டுவசதி துறை அமைச்சர் ஜமீர் அகமதுகானுக்கும் இடையில், வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், காக்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ராஜு காகே நேற்று அளித்த பேட்டி:மாநில அரசின் நிர்வாக அமைப்பு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இரண்டு ஆண்டுக்கு முன் என் தொகுதிக்கு, முதல்வரின் சிறப்பு மானியத்தின் கீழ் 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 12 கோடி ரூபாயை சாலை மேம்பாட்டிற்கும், மீதம் 13 கோடி ரூபாயை சமூக நலக்கூடங்கள் கட்டவும் முன்மொழியப்பட்டது. ஆனால், இதுவரை பணி ஆணை வழங்கப்படவில்லை. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.பி.ஆர்.பாட்டீல் கூறியதை விட, என் தொகுதியில் நிலைமை மோசமாக உள்ளது. பி.ஆர்.பாட்டீல் பேசி இருப்பதை நான் வரவேற்கிறேன். என் மனம் மிகவும் புண்பட்டு உள்ளது. ராஜினாமா செய்யும் மனநிலையில் உள்ளேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில், என் பதவியை ராஜினாமா செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

அப்பாவி
ஜூன் 24, 2025 07:42

அடிக்கிற துட்டில் எல்லோருக்கும் கொஞ்சம் பங்கு பிரிச்சு குடுக்கணும்.


நிக்கோல்தாம்சன்
ஜூன் 24, 2025 04:26

கர்நாடகாவில் sc/st பிரிவினரின் மீது தான் காங்கிரஸ் அரசு குறிவைத்து இயங்குகிறது , இது யார் சொல்லி இவ்வளவு வன்மத்தை காட்டுகிறது என்பது புரியவில்லை ,


Kasimani Baskaran
ஜூன் 24, 2025 03:42

கன்னடனுக்கு சின்ன பிரச்சினை கூட பூதாகரமாக தெரிகிறது. ஆனால் தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் இளவரசர் முப்பதாயிரம் கோடி அடித்தால் கூட அசராமல் ஒருவர் அதையும் வெளியில் சொல்லிக்கொண்டு தான் ஒரு நேர்மையாளன் என்று பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பார். நீதிபதிகள் பதவி கூட அந்தக்கட்சி தான் போட்ட பிச்சை என்று நினைத்து உருட்டிக்கொண்டு இருக்கிறது.