உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போரில் அடைந்த வெற்றியை பயன்படுத்த தவறியது காங்கிரஸ் அரசு: ராஜ்நாத் சிங்

போரில் அடைந்த வெற்றியை பயன்படுத்த தவறியது காங்கிரஸ் அரசு: ராஜ்நாத் சிங்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அக்னுார்: ''பாகிஸ்தான் ஆக்ரமித்துள்ள காஷ்மீரை மீட்காமல், ஜம்மு காஷ்மீர் என்பது முழுமை பெறாது,'' என்று, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=edikkobo&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னுாரில் இன்று ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டார்.வீரர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:ஜம்மு காஷ்மீர் என்பது, பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஒரு பகுதியும் சேர்ந்தது தான். அந்த பகுதி இல்லாமல், ஜம்மு காஷ்மீர் முழுமை பெறாது. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் நிலப்பரப்பு, பயங்கரவாதச் செயல்களை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. பயங்கரவாதிகளுக்கான பயிற்சி முகாம்கள் அங்கு நடத்தப்படுகின்றன. அந்த முகாம்களை பாகிஸ்தான் அழித்தே தீர வேண்டியிருக்கும்.இந்தியா, பாகிஸ்தான் படையினர் இடையிலான போர், 1965ம் ஆண்டு அக்னுாரில் மிக உக்கிரமாக நடந்தது. இதில், இந்தியப்படையினர், பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சிகளை வெற்றிகரமாக முறியடித்தனர்.சரித்திரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து போர்களிலும் இந்தியா வெற்றியே பெற்றுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக போராடி, நமது இஸ்லாமிய சகோதாரர்கள் பலர் உயிர் துறந்துள்ளனர்.இப்போதும் கூட, இந்தியாவுக்குள் வரும் பயங்கரவாதிகளில் 80 சதவீதம் பேர் பாகிஸ்தானில் இருந்தே வருகின்றனர். எல்லை தாண்டிய பயங்கரவாதம், 1965ம் ஆண்டு போருடன் முடிவுக்கு வந்திருக்கும்; ஆனால், அந்த போரில் அடைந்த வெற்றியை, அப்போதைய காங்கிரஸ் அரசு ராஜதந்திர ரீதியில் பயன்படுத்த தவறி விட்டது.இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

J.V. Iyer
ஜன 15, 2025 04:28

POK ஹிந்துஸ்தானுடன் இணைந்தால் அங்கு உள்ள பயங்கரவாதிகளும், கொள்ளையர்களும், தேசவிரோதிகளும், காமவெறியர்களும்தானே இங்கு வருவார்கள்? எதற்கு வேலியில் போகும் ஓணானை வேட்டிக்குள் விட்டு வேடிக்கை பார்க்கவேண்டும்?


Rajarajan
ஜன 15, 2025 02:49

முற்றிலும் உண்மை. ஆனால், எந்த காரணத்திற்க்காக இந்தியா பிரிந்தது என்பதை சொன்னால், அதை பிரசுரிக்க இயலாது. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். பங்காளி சுயநலம் தான், இவற்றிற்கெல்லாம் காரணம். அது ஒரு குடும்பத்தின் சுயநலம்.


ஆரூர் ரங்
ஜன 14, 2025 21:45

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி முழுவதும் மூர்க்க ஆட்கள் மயம். இனிமேல் அவர்கள் இருக்குமிடத்தைப் பிடித்து என்னாகப் போகிறது? மேலும் அதில் பெரிய நிலப்பகுதி காரகோரம் நெடுஞ்சாலைக்காக சீனாவிடம் குத்தகைக்கு விடப்பட்டிருக்கிறது.. பிரச்சினைகள் அதிகரிக்கும்.


Ramesh Sargam
ஜன 14, 2025 21:23

நம் நாட்டில் உள்ள தேசதுரோகிகள் ஒழிந்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் நிலப்பரப்பு சீக்கிரம் மீட்டெடுக்கப்படும்.


James Mani
ஜன 14, 2025 19:13

ஒரு போர் இப்போது நடந்தால் நமக்கு ஒரு நல்ல வெற்றி உண்டு மீட்க வேண்டும் நமது ஜம்மு காஷ்மீர் மாநிலம் முழுவதும் 2025 நமது வெற்றி ஆண்டு


அப்பாவி
ஜன 14, 2025 19:05

நம்ம ஜீ போரே இல்லாம சீன இறக்குமதியை அதிகரிச்சுட்டாரே. .


abdulrahim
ஜன 14, 2025 18:22

அதாவது எல்லாவற்றிலும் நாங்க விளம்பரம் தேடுவதை போல னு சொல்லாம சொல்லுறாரு


GMM
ஜன 14, 2025 17:52

டிரம்ப் புரிந்தது , தீவிரவாத குழு முதலில் வலுவற்ற நாடுகளில் ஆக்கிரமிப்பர். அமெரிக்கா இறையாண்மைக்கு பங்கம் வரும் என்று புரிந்து, கனடா, மெக்ஸிகோ போன்ற நாடுகளை அமெரிக்க மாகாணம் ஆக்க விரும்புகிறார். இந்த அணுகுமுறை சரியே. பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தியா இலங்கை, திபெத் , நேபால், பூட்டான் பாகிஸ்தான் ... போன்ற ஆக்கிரமிப்பு நாடுகள் மற்றும் சுற்றியுள்ள தீவுகளை தன் பாதுகாப்பு, நிர்வாகம் கீழ் கொண்டுவர வேண்டும். குற்றம் புரியாத, 18 வயதிற்கு மேற்பட்ட, ஆண், பெண் கட்டாயம் ராணுவ பயிற்சி பெறவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை