உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / திறமை இல்லாத கட்சியாக மாறிவிட்டது காங்கிரஸ்: பா.ஜ., தாக்கு

திறமை இல்லாத கட்சியாக மாறிவிட்டது காங்கிரஸ்: பா.ஜ., தாக்கு

புதுடில்லி: '' ராகுலின் தலைமை காரணமாக திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது'' என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறினார்.வரப்போகும் லோக்சபா தேர்தலையொட்டி வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை வரை, பாரத் ஜோடோ நீதி யாத்திரை என்ற நடைபயணத்தை, இன்று(ஜன.,14) ராகுல் துவக்குகிறார். இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியதாவது: பாரத் ஜோடோ நீதி யாத்திரை என்பதற்குப் பதிலாக காங்கிரஸ் தலைவர்களின் நீதி யாத்திரை என ராகுல் துவங்கினால் நன்றாக இருக்கும். கட்சியை விட்டு ஒவ்வொருவராக வெளியேறும் தலைவர்களுக்கு அவர் நீதி வழங்க வேண்டும். கிழக்கிலிருந்து மேற்கு வரை காங்கிரஸ் தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொண்டு கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். ராகுலின் தலைமை காரணமாக திறமை இல்லாத கட்சியாக காங்கிரஸ் மாறிவிட்டது. இவ்வாறு அவர் கூறினார். ராகுலின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனை தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து தலைவர்கள் விலகி வருவதற்கு நீதி கிடைக்க ராகுல் யாத்திரை நடத்தினால் நன்றாக இருக்கும் என பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா விமர்சித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ