உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஊழல் செய்வதில் காங்., இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது: பிரதமர் மோடி

ஊழல் செய்வதில் காங்., இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது: பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஹோஷியாப்பூர்: ஊழல் செய்வதில் காங்கிரஸ் இரட்டை முனைவர் (பி.எச்டி) பட்டம் பெற்றுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.பஞ்சாப் மாநிலம் ஹோஷியாப்பூரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நீண்ட நாட்களுக்கு பிறகு, முழு மெஜாரிட்டி உடன் ஒரு அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. மத்தியில் ஆட்சி அமைத்ததும் ஆதம்பூர் விமான நிலையத்திற்கு குரு ரவிதாஸ் பெயர் சூட்டப்படும். ஊழல் செய்வதில் காங்கிரஸ் இரட்டை முனைவர் பட்டம் பெற்றுள்ளது. ஏழைகள் நலனே எனது அரசின் முக்கியமான திட்டம். மாநிலத்தில் விவசாயம் மற்றும் தொழில்துறையை ஆம் ஆத்மி அரசு அழித்துவிட்டது.அரசியலமைப்பு குறித்து இண்டியா கூட்டணியினர் பேசுவதை கேட்க முடிகிறது. இவர்கள் தான் அவசரகாலத்தில் அரசியலமைப்பை நெறித்தனர். 1984 ல் சீக்கியர்கள் கொல்லப்பட்ட போது, அவர்கள் ஏன் அரசியலமைப்பை பற்றி சிந்திக்கவில்லை. தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டை யாராலும் பறிக்க விட மாட்டேன் என உறுதிமொழி எடுத்துள்ளேன். இதற்கு எதிராக காங்கிரஸ், இண்டியா கூட்டணியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இட ஒதுக்கீட்டை பறித்த வரலாறு அக்கட்சிகளுக்கு உண்டு. அரசியல்சாசனத்தின் ஆன்மா, அம்பேத்கரின் ஆன்மாவை அவர்கள் அவமதிக்கின்றனர். இந்த இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என சொல்கின்றனர். இதனை நான் அம்பலப்படுத்தியதால், அவர்கள் கோபம் அடைந்து என்னை திட்டுகின்றனர்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Rajarajan
மே 30, 2024 20:45

எப்படி ? நீங்க தமிழ்நாட்டுல கூட்டணி வச்சிருக்கற தி.மு.க. மாதிரியா ?? ஆரியன், திராவிடன் பிரிவினை. பிராமணர்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்தவர்கள். திராவிட ராஜகுரு சொன்னதை விடவா ?? பார்ப்பனயம், பாம்பையும் ஒருசேர கண்டால், முதலில் பார்...... அடி. பிராமணரை ஒட்டுமொத்தமாக அப்போதே .............. செய்திருக்கவேண்டும். பிராமணன் தான் இரண்டாயிரம் வருடமாக, மற்றவரை முன்னேறவிடாமல் தடுத்தான். இதுபோன்ற பிரிவினைதானே பேசணும்னு விரும்பறீங்க. என்ன சார், நீங்க தான் சிறந்த நிர்வாகி ஆயிற்றே. பின்னர் உங்களுக்கு எதற்கு அரசியல். அதற்க்கு எல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க.


M Ramachandran
மே 30, 2024 20:03

indi கூட்டணி டிங் டிங் கூட்டணி சில சமயம் அவர்களுக்குள் முட்டவும் மோதாவும் செய்யும். நெல்லிக்காய் மூட்டை. அவர்களால் முட்டையின் கயிறு அவிழாமால் காக்க முடிய வில்லை அவிழ்ந்து ஒன்று ஒன்றாய்ய்ய சிதறி ஓடுது


abdulrahim
மே 30, 2024 19:53

தான் செய்த சாதனைகள் பற்றி ஒரு வரி கூட பேச துப்பில்லாத கோழை , மதத்தை பற்றி மட்டுமே பேசிய ஒரு மட்டமான பிரதமர்...


Senthoora
மே 30, 2024 21:15

உண்மைதான், இன்று பிரியங்கா, ராகுல் இவர்களுக்கு இருக்கும் பொது அறிவு, பேச்சுத்திறமை பிரதமரிடம் இல்லை. 10 வருடத்தில் மோடிஜி சாத்தித்து என்ன? ராஜீவின் பிள்ளைகள், இன்று அரசியல் சாணக்கியத்தில் முன்னேரி இருக்கிறார்கள்.


abdulrahim
மே 30, 2024 19:50

செல்லாக்காசு


venugopal s
மே 30, 2024 18:11

ஆனால் பாஜக ஊழலுக்கு பல்கலைக்கழகமே நடத்துகிறதே!


Easwar Kamal
மே 30, 2024 18:01

மோடிஜி ஒருவர் ஊழல் சேய்தல் ஊழல் வாதி என்கிறீர்களே ஊழலுக்கு துணை போனாலும் ஊழல் தன. இந்த 5 ஆண்டுகளில் ஆபரேஷன் லோட்டஸ் என்று சொல்லி எதனை மாநிலம் galli பண்ணி மற்றும் இப்போது வரை இந்த எலக்ஷன் கமீஸின் மற்றும் அமலாக்கத்துறை வைத்து தனக்கு வேண்டியவர்களை விட்டு விட்டு வேண்டாதவர்களை galli பண்றது. இந்த சித்து விளையாட்டை மட்டுமே இந்த 5 வருடம் பிரதான தொழிலாக வைத்து நாட்டை மறந்தாச்சு. அடுத்த 5 அடுகுக்கு பிளான் பண்ணிவிட்டு குமாரி வந்தாச்சு. பார்க்கலாம் மக்களை ஏமாற்றலாம் இயற்கை ஓம்தரு இருக்கு அல்லாவா அந்த கணக்கை யாராலும் மற்ற முடியாது.


Syed ghouse basha
மே 30, 2024 17:28

ஐம்தாண்டு காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் சம்பாதிக்காத சொத்து பணம் பத்து ஆண்டுகளில் சேர்த்த பஜக வா ஊழலைபற்றி பேசுவது? மக்களுக்கு தெரியும்


Anbuselvan
மே 30, 2024 17:17

அவர்கள் கட்சி வெறும் சிஷ்யர் கட்சிதான். குரு கட்சி நம் தமிழத்து கட்சிதான்.


அப்புசாமிம்
மே 30, 2024 17:03

என்னத்த முக்குனாலும் விழற ஓட்டுதான் விழும். சரி, அதானி உங்க மேலே கோவமா இருக்காராமே.


Ramanujadasan
மே 30, 2024 16:41

மோடி ஜி , எங்க ஆளும் கட்சியை குறைத்து மதிப்பிடுறீங்க


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை