உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மஹா.,வில் தோல்விக்கு காரணம் காங்கிரஸ்: உத்தவ் தரப்பினர் புலம்பல்

மஹா.,வில் தோல்விக்கு காரணம் காங்கிரஸ்: உத்தவ் தரப்பினர் புலம்பல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: '' லோக்சபா தேர்தலுக்கு பிறகு மஹாராஷ்டிராவில் காங்கிரசின் அதீத நம்பிக்கையே தோல்விக்கு காரணம் ,'' என உத்தவ் தாக்கரே தரப்பினர் குற்றம்சாட்டி உள்ளனர்.மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணியான மஹா விகாஸ் அகாடி கூட்டணி 46 தொகுதிகளில் மட்டுமே கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தது. 1-3 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், 89 தொகுதிகளில் போட்டியிட்ட உத்தவ் தாக்கரே சிவசேனா 20 தொகுதியிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 87 தொகுதியில் போட்டியிட்டு 10 ல் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6phiaawz&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தேர்தல் முடிந்த பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளுக்கு ஒரு காரணத்தை கூறி வருகின்றனர். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும். சட்ட மேலவையில் எதிர்க்கட்சி தலைவருமான அம்பாதாஸ் தான்வே கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு பிறகு, ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரைப் போல் மஹாராஷ்டிராவிலும் காங்கிரஸ் அதீத நம்பிக்கையில் இருந்தது. இது தேர்தலில் பிரதிபலித்தது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் எங்களை அக்கட்சி காயப்படுத்தியது. உத்தவ் தாக்கரேவை முதல்வர் வேட்பாளராக முன்னிலைப்படுத்தி இருக்க வேண்டும். அப்படி செய்யாதது கூட்டணியை பாதித்தது. அப்படி செய்து இருந்தால் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக இருந்து இருக்கும்.தேர்தல் முடிவு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பதவியேற்புக்கு அவர்கள் தயாராகிவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Jay
நவ 29, 2024 22:45

மத்திய தேர்தலில் ஒவ்வொரு மகளிருக்கும் ஒவ்வொரு வருடமும் ஒரு லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறியும், காங்கிரஸ் மூன்று இலக்க எண்ணில் எம்பிக்களை பெற இயலவில்லை. அதிலிருந்து தெரிகிறது காங்கிரஸ் இந்தியா முழுவதும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டது. இந்தி கூட்டணியில் இருந்தால் சொந்த பலத்தில் மட்டுமே வெற்றி பெற முடியும், திமுக, ஜேம்ம், மம்தா போல. சொந்த பலம் இல்லாவிட்டால் படுதோல்விதான். மற்றொரு காரணம் வாரிசு அரசியல். ஜனநாயகத்தின் விரோதிகள் யார் என்றால் இந்த வாரிசு அரசியல்வாதிகள் தான், அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி.


ARAI G P PANDIAN
நவ 29, 2024 11:24

இந்துத்துவா கொள்கைகளை விட்டு விட்டது பால்தாக்ரேஜி அவர்களின் கொள்கைக்கு எதிரான காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி அமைத்தது சஞ்சய் ராவுத்தின் தவறான வழிகாட்டுதல் ஆகிய முக்கிய காரணம்


பேசும் தமிழன்
நவ 29, 2024 08:23

பால்தாக்கரே அவர்களின் மகன் சிந்திக்க வேண்டும்.. கான் கிராஸ் கட்சியுடன் கூட்டணி என்பது பொருந்தாத ஒன்று.. நாளையே கூட்டணி இல்லை என்று கூறி பாருங்கள்... அடுத்த நாள் மதவாத சிவசேனா என்று பப்பு கம்பெனி ஆட்கள் கூவ தொடங்குவார்கள்.


ARAI G P PANDIAN
நவ 29, 2024 11:25

கரெக்ட்


பேசும் தமிழன்
நவ 29, 2024 08:16

உன்னால நான் கெட்டேன்.... என்னால நீ கெட்டாய்... கூட்டமாக சேர்ந்து கும்மி அடிக்க வேண்டியது தான் !!!.... போலியான இண்டி கூட்டணி ஆட்களை விரட்டி அடித்த மகாராஷ்டிரா மக்களுக்கு வாழ்த்துக்கள்.


Kasimani Baskaran
நவ 29, 2024 06:36

பலர் இ வி எம்தான் காரணம் என்று இன்னும் கூட நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள் . இவர்கள்தான் காங்கிரஸ் மீது பழி போடும் முதல் ஆள்.


Bhaskaran
நவ 29, 2024 05:32

பேசாமல் கட்சியை ஷிண்டே கிட்டே ஒப்படை.அதுதான் பால்தாக்கரே வுக்கு நீ செய்யும் நன்றி கடன்


Constitutional Goons
நவ 29, 2024 01:39

அனைத்தும் அதானியின் புரோக்கர் வேலை, அதானி அம்பானியின் பணபலம் மற்றும் சந்தைகளில் உள்ள உலகளாவிய குண்டர்களின் கைங்கர்யம் தான் இதற்க்கு காரணம். நாட்டை அந்நியர்களுக்கு ஒரு சிலருக்கு அடகு வைத்துவிட்ட மோடிக்கு கிடைத்த சன்மானம். இழந்தது இந்தியா, இந்தியர்கள்


பேசும் தமிழன்
நவ 28, 2024 21:34

பால் தாக்கரே அவர்கள்.... தான் இறக்கும் வரை கான் கிராஸ் கட்சியை ஒதுக்கி வைத்து இருந்தார்..... தன் முதல் எதிரி பயங்கரவாதிகளுக்கு ஆதரவான கான் கிராஸ் கட்சி தான் என்று கூறி வந்தார்.... ஆனால் நீங்கள் பதவி சுகத்துக்காக.... கான் கிராஸ் கட்சியுடன் கூடி குலாவினால்...மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ???


Ramesh Sargam
நவ 28, 2024 20:09

இந்தியாவின் அழிவுக்கு காரணமே இந்த காங்கிரஸ் கட்சியினர்தான். மஹா. தோல்விக்கு மட்டும் காங்கிரஸ் காரணம் இல்லை. நல்ல வேலை பாஜக ஆட்சிக்கு வந்தது. இந்தியா தப்பித்தது.


M Ramachandran
நவ 28, 2024 19:56

இவர் எனன இப்படி சொல்கிறார். காங்கரஸ் தலைவர் கார்கீ ஒட்டு மிஷினை குறை கூறி தப்பிக்க பார்க்கிறார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை