உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அம்பேத்கருடன் ராகுலை ஒப்பிட்ட காங் நிர்வாகி: பாஜ கண்டனம்

அம்பேத்கருடன் ராகுலை ஒப்பிட்ட காங் நிர்வாகி: பாஜ கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: '' லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஓபிசி பிரிவினருக்கு இரண்டாவது அம்பேத்கராக மாறுவார்,'' என காங் முன்னாள் எம்பி உதித் ராஜ் கூறியுள்ளார். இது எஸ்டி பிரிவினருக்கும், அம்பேத்கரையும் இழிவுபடுத்துவதாக பாஜ கண்டனம் தெரிவித்துள்ளது.நேற்று டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராகுல், ' நான் எங்கு தவறு செய்தேன். எங்கு சிறப்பாக பணியாற்றினேன் என எனது கடந்த கால நிகழ்வுகளை ஆலோசித்து வருகிறேன். நிலம் கையகபடுத்துதல் சட்டம், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம், உணவுக்கான உரிமைச்சட்டம், பழங்குடியினர் சட்டம் உள்ளிட்டவற்றில் சரியாக பணியாற்றி உள்ளேன். பழங்குடியினர், தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில் 'பாஸ் மார்க்' வாங்கி உள்ளேன்.ஆனால், ஒபிசி சமுதாயத்தினரை பாதுகாக்காததே எனது வேலையில் சரியானதாக இல்லை. இதற்கு ஒபிசி பிரச்னைகளை சரியாக புரிந்து கொள்ள முடியாததே காரணம் ஆகும். தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்னை வெளிப்படையாக இருந்த காரணத்தினால், புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இதற்கு நேர்மாறாக ஓபிசி பிரிவினரின் பிரச்னை உள்ளது. அதனை புரிந்து கொண்டு இருந்தால், ஜாதிவாரி கணக்கெடுப்பை அப்போது நடத்தியிருப்பேன். அப்படி செய்யாதது எனது தவறு தான். அதனை சரி செய்ய முயற்சி செய்கிறேன் எனக்கூறியிருந்தார்.இது தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் எம்பி உதித் ராஜ் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், வளர்ச்சிக்கான வாய்ப்பினை வரலாறு மீண்டும் மீண்டும் வழங்காது என்பதை ஓபிசி பிரிவினர் புரிந்து கொள்ள வேண்டும். நேற்று ராகுல் சொன்னதை அவர்கள் ஆதரவு அளித்து பின்பற்ற வேண்டும். அப்படி செய்தால், அவர்களுக்கு அம்பேத்கர் இரண்டாம் அம்பேத்கராக மாறுவார். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இது தொடர்பாக பாஜவின் செய்தித் தொடர்பாளர் செஷாத் பூனவல்லா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தாழ்த்தப்பட்டவர்களையும், அம்பேத்கரையும் அவமானப்படுத்துவது என்பது காங்கிரசின் அடையாளமாக உள்ளது. அம்பேத்கரை அவமானப்படுத்தியது யார்? அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாதது ஏன்? ஜம்மு காஷ்மீரில் அவரது அரசியல்சாசனத்தை அமல்படுத்தாதது யார்? முஸ்லிம் இட ஒதுக்கீடு குறித்து பேசியது யார்? இட ஒதுக்கீடு மோசம் எனக்கூறியவர் முன்னாள் பிரதமர் நேரு. தற்போது இந்திரா, நேருவாக இல்லாமல் இரண்டாம் அம்பேத்கராக விரும்புகின்றனர். இதன் மூலம் நேரு, இந்திரா ஆகியோர் நாட்டை தவறான பாதையில் சென்றனர் என்பதை ஒப்புக் கொள்கின்றனர். ஒரு குடும்பத்தை மட்டும் போற்றுவதையே காங்கிரசின் வழக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

பேசும் தமிழன்
ஜூலை 27, 2025 12:44

பப்பு...அந்த காலத்திலேயே உன் அப்பா தலைமையிலான கான் கிராஸ் கட்சி இடஒதுக்கீடு தொடர்பான மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த விடாமல் இடையூறு செய்தார்கள் ....நீ இப்போது யாரை ஏமாற்ற இந்த நாடகம் போடுகிறாய் ....உங்கள் குடும்ப நாடகம் எல்லாம் இனி எடுபடாது ...நாட்டு மக்களுக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது ....நாட்டு மக்களை ஏமாற்ற உங்கள் பெயருக்கு பின்னால் போலியாக வைத்து கொண்டு இருக்கும் காந்தி உட்பட அனைத்தும் பொய் என்று மக்களுக்கு நன்றாகவே தெரியும்...அதனால் தான் நாட்டு மக்கள் தேர்தலில் உங்களை விரட்டி அடிக்கிறார்கள்.


ராமகிருஷ்ணன்
ஜூலை 27, 2025 09:58

முஸ்லிம் தீவிரவாதியை அம்பேத்கருடன் ஒப்பிட்டது காங்கிரஸ்காரர்களின் வன்மத்தை, கேவல புத்தியை காட்டுகிறது.


Iyer
ஜூலை 27, 2025 01:01

ஏன் ராகுலையும் கடவுளையும் ஒப்பிட்டு - ராகுல் கடவுளுக்கும் மேற்பட்டவர் என்று சொல்லவேண்டியதுதானே நமது அரசியல் சாசனத்தை உருவாக்குவதில் பெரும் பங்கு Dr. அம்பேத்கர் அவர்களுக்கு உண்டு. ராகுல் செய்த சாதனை எதாவது ஒன்று உண்டா>


Srinivasan Srisailam Chennai
ஜூலை 26, 2025 21:53

அதிமேதாவியையும் அடி முட்டாளையும் ஒப்பிடுவது எப்படி என்று காங்கிரஸ் இடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்...


sankaranarayanan
ஜூலை 26, 2025 20:59

பிரிட்டன் நாட்டில் குடியுரிமை பெற்று இந்தியாவிலும் குடியுரிமை பெற்ற ஒரே ஆள் இவருதான். தான் செய்த தவறை மறைக்க அம்பேத்கரை அழைப்பது பேசுவது ஒப்பிடுவது எல்லாமே கபட நாடகங்கள்.இதை சொன்னவரு மீது உச்ச நீதிமன்றமே உடனே அவமான வழக்கு தொடரவேண்டும் குப்பையோடு மாணிக்கத்தை ஓப்பிடலாமா


பேசும் தமிழன்
ஜூலை 26, 2025 20:50

அம்பேத்கர் அவர்களை இதை விட யாரும் கேவலப்படுத்த முடியாது..... அந்த மேதை எங்கே.... இந்த பப்பு எங்கே....யாரை யாருடன் ஒப்பீடு செய்கிறாய்.... வேண்டுமானால் ஜின்னா அவர்களுடன் ஒப்பீடு செய்து கொள்ளுங்கள்..... அவர்களுக்கு தான் நல்லது செய்ய நினைக்கிறார்.


Kulandai kannan
ஜூலை 26, 2025 20:19

காங்கிரஸ் என்றாலே பூரா பயலும் உளறல்தான்


palaniappan. s
ஜூலை 26, 2025 19:40

ராகுலை அம்பேத்கருடன் ஒப்பீடு செய்வது அடாவடியானது. காங்கிரஸ் தொடர்ந்து அம்பேத்கரை இழிவு படுத்துகிறது.


ஆரூர் ரங்
ஜூலை 26, 2025 19:24

ராஜிவ் காந்தி மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தவில்லை. விரும்பவுமில்லை. திறமையின்மையை வளர விடமாட்டேன் என்றார்.


naranam
ஜூலை 26, 2025 19:09

யாரு அந்த 2000 கோடி நேஷனல் ஹெரால்டு கொள்ளை கூட்டாளியான ராகுலா அம்பேத்கர்? என்ன ஒரு கபட நாடகம்..


A viswanathan
ஜூலை 27, 2025 00:18

இவனை அளரங்கசீப் உடன் ஒப்பிட்டால் தகும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை