மேலும் செய்திகள்
பார்லி.,யில் நேற்று...
5 hour(s) ago
எஸ்.ஐ.ஆர்., விவாதத்துக்கு எதிர்க்கட்சிகள் அடம்
5 hour(s) ago
புதுடில்லி: வேறு நாட்டின் நலனுக்காக, நம் நாட்டின் சுயாட்சியை அடகு வைக்க முடியாது என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். பரபரப்பான உலக அரசியல் சூழலில் ரஷ்ய அதிபர் புடின் நாளை இந்தியா வருகிறார். இந்தப் பயணத்தின் போது, அவர் பிரதமர் மோடியை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்த நிலையில், ரஷ்ய அதிபரின் இந்தப் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று காங்கிரஸ் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார். பார்லி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது; ரஷ்ய அதிபர் புடினுடன் இந்திய வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இருநாடுகளுக்கு இடையேயான உறவு சிறப்பானது. நீண்ட காலமாக ராஜதந்திர சுயாட்சி குறித்து இருநாடுகளும் பேசி வருகின்றன. எங்களைப் பொறுத்தவரை, வேறு நாட்டின் நலனுக்காக, நம் நாட்டின் சுயாட்சியை அடகு வைக்க முடியாது. நாம் ரஷ்யாவுடன் முக்கியமான உறவை கொண்டிருப்பதால், அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பும் இந்தியாவுக்கு கிடைக்கிறது. அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுடன் சுதந்திரமான உறவை இந்தியா கொண்டிருக்க வேண்டும். ரஷ்யாவுடனான உறவு மிகவும் பழமையான மற்றும் வலுவான உறவாகும், இவ்வாறு அவர் கூறினார்.
5 hour(s) ago
5 hour(s) ago