உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காங்., மவுனம்: நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் காங்., மவுனம்: நிர்மலா சீதாராமன் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ், ஒரு அறிக்கை கூட வெளியிடாமல் மவுனம் காப்பது அதிர்ச்சி அளிப்பதாக கூறியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.இது தொடர்பாக நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

கண்டனம்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 56 பேர் இறந்தனர். 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. கள்ளச்சாராய சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.

மவுனம்

கள்ளச்சாராய பலிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி ஒரு அறிக்கை கூட விடாமல் மவுனம் காப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு நடத்தும் டாஸ்மாக் மூலம் லைசென்ஸ் பெற்று மதுவிநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக, கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் ரசாயனம் கலந்த கள்ளச்சாராயம் விற்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் எங்கே போனார்கள். வெற்றி உறுதி என தெரிந்ததால், லோக்சபா தேர்தலில் ராகுல் போட்டியிட்டார். ஆனால், கள்ளச்சாராயத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் இறந்தால், ராகுலிடம் இருந்து ஒரு அறிக்கை கூட வெளிவராது.

அனுமதி மறுப்பு

1971 ல் வழங்கப்பட்ட பல நல்ல அறிவுரைகளையும் மீறி, தமிழகத்தில் மதுவிலக்கை நீக்கிய திமுக அரசு மதுவை அறிமுகப்படுத்தியது. இதற்கு பிறகு, ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்தது. இன்று அரசே டாஸ்மாக் மூலம் மது விநியோகம் செய்கிறது. இந்த கடைகள் மாநிலம் முழுவதும் உள்ளது. ஆனால், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால், மக்கள் உயிரிழந்துள்ளனர். இதற்கு வீட்டின் பின்புறம் கள்ளச்சாராயம் காய்ச்சியதே காரணம். 5 குழந்தைகள் பெற்றோரை இழந்து அனாதை ஆகி உள்ளனர். இந்த விவகாரம் குறித்து சட்டசபையில் விவாதம் நடத்த திமுக அரசு அனுமதி மறுக்கிறது.

வலியுறுத்தல்

இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என பா.ஜ., சார்பில் வலியுறுத்துகிறேன். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களுக்கு ஆளுங்கட்சியினர் ஆதரவு அளிப்பதால் மாநில அரசு நடத்தும் விசாரணை முழுமை பெறாது. இதனால், இந்த விவகாரத்தை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

INDIAN
ஜூன் 26, 2024 19:21

அம்மையார் சொல்வது நியாயம் தான் காங்கிரஸ் கள்ளக்குறிச்சி பற்றி பேசியிருக்கவேண்டும் , ஆனால் அதை கேட்கும் நீங்கள் மணிப்பூர் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்ததே , பாஜகவின் குரல் எது என்ற்று சொல்ல முடியுமா? லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருக்கும்போது தெலுங்கானாவில் மழை வெள்ளத்தில் ஒரு சிறிய தரைப்பலமும் அதோடு தண்டவாளமும் அடித்து சென்றதில் சிலர் இறந்து போயினர் அப்போது பாஜக அவரை சம்பவம் நடந்த இடத்திற்கு அனுமதிக்காது போராட்டம் செய்ததோடு அவர் பதவி விலக வேண்டி பாராளுமன்றத்தில் போராடியது . தற்போது ரோட்டில் ஓடும் காரில் கூட ஓட்டுநர் இல்லாது ஓடும் கார்வந்துவிட்டது , பல நாடுகளில் ரயில்களில் ஓட்டுநர் இல்லை அப்படி இருக்கிற காலக்கட்டத்தில் ஒரே தண்டவாளத்தில் ரயில்கள் மோதிக்கொள்வது இங்கு வாடிக்கையாகிவிட்டதே , இப்போது போராட்டம் நடத்துகிறீர்களா? , ரயில்வே மந்திரி பதவி விலகிவிட்டாரா? 1. குஜராத்தில் நடந்த விஷச்சாராய மரணம் 2. மோர்பி பாலம் கவிழ்ந்த விபத்து ௩.பலமுறை நடந்த ரயில் விபத்து எதற்கு நீங்கள் பொறுப்பேற்றுயிருக்கிறீர்கள்


Muradan Muthu
ஜூன் 26, 2024 10:14

எங்களுக்கும்தான் உங்க பட்ஜெட் வரும்போதெல்லாம் அதிர்ச்சி யாக இருக்கு ...


pmsamy
ஜூன் 24, 2024 08:34

ஜால்ரா நிதி அமைச்சர்


ராம்யாதவ்
ஜூன் 24, 2024 07:34

இவருக்கு அதிர்ர்ச்சியே வரலை. வராது.


ராமகிருஷ்ணன்
ஜூன் 24, 2024 05:46

40 பேரும் நேர்மையான உங்களை பார்த்து பயப்படுகிறார்கள். அது போதும். அவர்களை தமிழில் திட்டுங்க. ஹிந்தியில் திட்டினா புரியாது.


Barakat Ali
ஜூன் 23, 2024 23:21

எனக்கு புடிச்ச பாட்டு ஸ்டாலின்தான் வர்றாரு ......... விடியல் தரப்போறாரு ன்ற பாட்டுதான் ..... சூப்பர் ஹிட் அடிச்ச பாட்டு அது .........


ES
ஜூன் 23, 2024 23:10

What have to done for people in ten years care to tell??


தமிழன்
ஜூன் 23, 2024 22:41

கள்ள சாராயத்தினால் ஜிஎஸ்டி வரி இழப்பு அரசுக்கு வந்து இருக்கு.. ஒரு வழக்கு போட்டு ஜிஎஸ்டி வரியை வசூல் பண்ணி அரசுக்கு வருவாயை சேர்க்க பாருங்க.. நிதி அமைச்சரே.. மற்றதெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்.. இத்தனை கோடி வருமானம் அரசுக்கு இழப்பு இல்லையா.. இதை மாநில அரசு ஈடுகட்ட வேண்டாமா?


T.sthivinayagam
ஜூன் 23, 2024 22:41

அதிர்ச்சி அடைய வேண்டாம் தமிழக மாநில காங்தகிரஸ தலைவர் ஏற்கனவே அறிவிக்கை அளித்து விட்டார் எப்படியாவது காசை சேர்த்து அடுத்த எலக்சனில் நில்லுங்கள் என்று மக்கள் கூறுகின்றனர்


Sundar R
ஜூன் 23, 2024 20:29

Tamilians will be safe only when dmk people close their liquor business


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி