உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.500 கோடிக்கு முதல்வர் பதவி: புகார் கூறிய சித்து மனைவியை சஸ்பெண்ட் செய்தது காங்.

ரூ.500 கோடிக்கு முதல்வர் பதவி: புகார் கூறிய சித்து மனைவியை சஸ்பெண்ட் செய்தது காங்.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: முதல்வர் பதவியில் அமர எங்களிடம் ரூ.500 கோடி இல்லை என்று கூறிய நவ்ஜோத் சிங் சித்து மனைவியை காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளது.ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரரும், விமர்சகருமாக இருப்பவர் நவ்ஜோத் சிங் சித்து. காங்கிரசில் உள்ளார். அண்மைக்காலமாக கட்சியின் செயல்பாடுகளில் ஈடுபடாமல் இருந்து வந்துள்ளார். இவரின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து பரபரப்பான குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார். அரசியல் கட்சிகளுக்கு ரூ.500 கோடி கொடுத்து முதல்வர் பதவி வாங்க எங்களிடம் பணம் இல்லை. சித்துவிடம் அதிகாரம் தந்தால் அவர் பஞ்சாபை மேம்படுத்துவார். காங்கிரசில் உட்கட்சி இருக்கிறது, என் கணவரை முன்னேற விட மாட்டார்கள் என்று கூறி இருந்தார். 2027ல் பஞ்சாபில் தேர்தல் நடக்க உள்ள தருணத்தில் நவ்ஜோத் கவுர் சித்து கூறிய இந்த குற்றச்சாட்டு கட்சிக்குள் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியது. காங்கிரஸ் ஒரு நிறுவனமாக செயல்படுகிறது என்று பாஜ குற்றம்சாட்டி இருந்தது.இந் நிலையில், நவ்ஜோத் கவுர் சித்துவை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி காங்கிரஸ் தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. என்ன காரணத்துக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்ற விவரங்கள் அந்த அறிவிப்பில் இல்லை. மாறாக, ஒரே ஒரு வரியில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ