மேலும் செய்திகள்
பிரசவ இறப்பு விகிதம் குறைந்தது: மத்திய அரசு அறிவிப்பு
1 hour(s) ago
அரசியல் சார்பற்ற பயணம்: பீஹாரில் வலியுறுத்திய சசிதரூர்
2 hour(s) ago | 1
பிரதமர் மோடியுடன் நீரஜ் சோப்ரா சந்திப்பு
4 hour(s) ago
கோல்கட்டா: மேற்குவங்க உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் இரு சிங்கங்களின் பெயர்களை மாற்ற கோல்கட்டா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மேற்கவங்க மாநிலம் சிலிகுரியில் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கம் ஒன்றிற்கு ‛சீதா' எனவும், ஆண் சிங்கம் ஒன்றிற்கு ‛ அக்பர்' எனவும் பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது, அதில் உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் இந்துக்கள், ராமரின் மனைவியான சீதையை தெய்வமாக கருதி வழிபடுகின்றனர். அப்பெயரை பெண் சிங்கத்திற்கு வைத்திருப்பது மன வேதனை அளிக்கிறது. இது, அனைத்து இந்துக்களின் மத நம்பிக்கையின் மீதான நேரடித் தாக்குதலாகும்.அதே நேரம் ஆண் சிங்கத்திற்கு ‛அக்பர்' என பெயரிடப்பட்டுள்ளது. இதனையும் மாற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.மனுவை ஏற்று விசாரணை நடத்திய நீதிபதி சவுகதா பட்டாச்சார்யா செல்லப் பிராணிகளுக்கு கடவுள் பெயர்களையும். ஒரு திறமையான, முகலாய பேரரசர் அக்பர் பெயரை சூட்டலாமா? அந்த விலங்குகளுக்கு வேறு பெயர்களை வைத்திருக்கலாம். அக்பர் மற்றும் சீதா பெயர்களை ஏன் வைக்க வேண்டும்?அரசு ஏற்கனவே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்த சர்ச்சை பெயர்களை தவிர்க்க வேண்டும். வேறு பெயர்களை வைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
1 hour(s) ago
2 hour(s) ago | 1
4 hour(s) ago