உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நன்கொடை பெயரில் ஊழல்: ராகுல் தாக்கு

நன்கொடை பெயரில் ஊழல்: ராகுல் தாக்கு

புதுடில்லி: ‛‛ ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி? நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தம் விநியோகம் செய்வது எப்படி ? என பிரதமர் மோடி பாடம் நடத்தி வருகிறார்'' என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.இது தொடர்பாக ராகுல் ‛எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி, நாட்டில் ஊழல் செய்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு ‛முழு ஊழல் அறிவியல்' என்ற பாடத்தின் கீழ், ‛நன்கொடை வியாபாரம்' உட்பட ஒவ்வொரு அத்யாயத்தையும் அவரே விரிவாக கற்பிக்கிறார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fnw7ghl7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், ரெய்டு நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தம் விநியோகம் செய்வது எப்படி?ஊழவ்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங்மெஷின் எப்படி செயல்படுகிறது?விசாரணை அமைப்புகளை பறிக்கும் முகவர்களாக்குவதன் மூலம் ‛ பெயில் மற்றும் சிறை' விளையாட்டை எப்படி விளையாடுவது என்பது குறித்து பாடம் நடத்தப்படுகிறது.ஊழல்வாதிகளின் கூடாரமாகி உள்ள பா.ஜ., அதன் தலைவர்களுக்கு இந்த பாடங்களை கட்டாயமாக்கி இருக்கிறது. அதற்கான கட்டணத்தை நாடு செலுத்துகிறது. ‛ இண்டியா' கூட்டணி மத்தியில் ஆட்சி அமைத்ததும், இந்த பள்ளியை மூடுவதுடன், இந்த பாடங்களை ரத்து செய்யும்.

150 இடங்களை தாண்டாது

பீஹாரின் பகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் பேசியதாவது: மத்தியில் ‛ இண்டியா' கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் அக்னிவீர் திட்டம் ரத்து செய்யப்படும். அனைவருக்கும் பென்சன் வழங்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி அமைப்பை மாற்றுவோம். ஒரே வரி குறைந்த வரி இருக்கும். அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியத்தை அதிகரிப்போம். அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என பா.ஜ.,வினர் கூறி வருகின்றனர். ஆனால், பா.ஜ.,150 இடங்களை தாண்டாது என நான் தெளிவாக கூறுகிறேன். அதற்கு மேல் ஒரு இடத்தையும் அக்கட்சி தாண்டாது. இவ்வாறு ராகுல் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Janarthanan R
டிச 20, 2024 20:43

This Is Very Wrong


venugopal s
ஏப் 21, 2024 13:03

பிரதமர் மோடி அவர்கள் எத்தனை பெரிய தவறுகள் செய்தாலும் கூட அது நாட்டின் நலனுக்காக என்று நம்பும் கூட்டம் இருக்கும் வரை ராகுல்காந்தி பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள்!


Lion Drsekar
ஏப் 21, 2024 10:53

பாம்பின் கால் பாம்பறியும், வந்தே மாதரம்


R Kay
ஏப் 21, 2024 02:40

நல்ல நாளிலேயே சொல்ல வேண்டாம் இப்போது வெயில் வேறு அதிகமென்பதால் பயபுள்ள இப்படி ஆயிடிச்சு


Ramesh Sargam
ஏப் 20, 2024 20:34

பாவம் காங்கிரஸ் கட்சிக்கு யாரும் நன்கொடை கொடுக்கவில்லை போல இருக்கு


விடியல்
ஏப் 20, 2024 16:02

அந்த டொனேஷண் இரண்டாவது இடத்தில் உங்கள் கட்சி உள்ளது எத்தனை தடவை கருப்பு பணமாக வாங்கி கணக்கு காட்டாமல் 80சதவீதம் கட்சி நிர்வாகிகள் கொள்ளை அடித்து உங்கள் குடும்பத்திற்கு கப்பம் கட்டிவந்ததற்கு இப்போது ஆப்பு வைத்ததால் எதிர்ப்பு


Prabakaran VK
ஏப் 20, 2024 15:02

ஊழலின் மொத்த உருவமே காங்கிரஸ் தான்


R SRINIVASAN
ஏப் 20, 2024 14:44

ராஜிவ் காந்தி போபோர்ஸ் ஊழலில் கொள்ளை அடித்ததையும்,சமீபத்தில் நேஷனல் ஹெரால்ட் ஊழலில் கொள்ளையடித்ததையும் நினைவு கொள்ளவும்


SUBBU,MADURAI
ஏப் 20, 2024 14:44

Election Drama, Nothing Else. Muslim Appeasement and Hindu Hate is in DNA of Congress...


R Kay
ஏப் 20, 2024 14:06

பப்பு RGF-காக பெறப்பட்ட நன்கொடைகள் எந்த வகையில் சேர்த்தி? ஊழலின் ஊற்றுக்களெல்லாம் ஒன்றாய் சேர்ந்த கூட்டணியே புள்ளி ராஜா கூட்டணி


மேலும் செய்திகள்











புதிய வீடியோ