உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறுவனுக்கு ஐகோர்ட் ஜாமின்

கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறுவனுக்கு ஐகோர்ட் ஜாமின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புனே: மஹாராஷ்டிராவில் சொகுசு கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் 17 வயது சிறுவனுக்கு மும்பை ஐகோர்ட் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.மஹாராஷடிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விஷால் அகர்வால், புதிய போர்ஷோ ரக சொகுசு காரில் கடந்த 19-ம் தேதியன்று அதிகாலையில் புனே அருகே கல்யாணி நகர் பகுதியில் 200 கிமீ அசுர வேகத்தில் காரை ஓட்டிச்சென்ற போது எதிரே பைக்கில் வந்த அனிஸ் அவதியா, இவரது மனைவி அஷ்வினி கோஷ்தா என்ற தம்பதியினர் மீது மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என தெரியவந்தது. சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் காரை ஓட்டி வந்த சிறுவன் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது.சிறுவனுக்கு கார் ஒட்ட அனுமதித்த குற்றத்திற்காக அவரது தந்தை விஷால் அகர்வாலை போலீசார் கைது செய்தனர். கடந்த 21-ம் தேதி அவருக்கு செஷன்ஸ் கோர்ட் ஜாமின் வழங்கியது.இந்நிலையில் இந்த வழக்கில் 17 வயது சிறுவனுக்கு ஜாமின் வழங்கிட கோரி மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் சிறுவனக்கு ஜாமின் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

gopi
ஜூன் 26, 2024 06:17

இந்த தருதள இவ்ளோ நாளு உள்ள இருந்ததே நம்ம சட்டங்களின் சாதனை...நீங்களும் உங்க சட்டமும்....நீதி அரசர் புகழ் ஓங்குக


Mani . V
ஜூன் 26, 2024 02:57

அப்புறம் என்னப்பா? அதுதான் உன் அப்பா நல்ல விலை கொடுத்து வாங்கி விட்டாரே. நீ இன்னும் பல பேர் மீது காரை ஏற்றலாம்.


தாமரை மலர்கிறது
ஜூன் 26, 2024 00:20

சிறுவர்களை ஜெயிலில் அடைக்கமுடியாது. சிறுவர் சீர்திருத்த கூடத்தில் மட்டுமே அடைக்க முடியும். இந்திய அரசியலமைப்பு சட்டப்படி ஜாமீன் கொடுத்ததில் தவறில்லை.


பார்த்த
ஜூன் 25, 2024 22:47

எங்கய்யா அந்த சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ... ஆள காணோம்


chandrakumar
ஜூன் 25, 2024 22:32

இந்த ஜாமீன் கொடுத்த உத்தமன் மகளும் மருமகனும் இந்த விபத்தில் செத்திருந்தால் இவன் இப்படி செய்திருப்பானா? காலக்கொடுமை இங்கே நீதியாவது கூ....யாவது காசேதான் கடவுள்.... நாசமாக போகட்டும்....


Jysenn
ஜூன் 25, 2024 21:51

Money.Panam.Tuttu. Kasu. Panam paathaalam varai paayum.


பல்லவி
ஜூன் 25, 2024 21:17

காசேதான் கடவுளடா


குமணன்
ஜூன் 25, 2024 21:04

இந்தியா ஏப்படி உருப்படும்? நாசமா போங்க.


KayD
ஜூன் 25, 2024 21:02

துட்டு பேசுது ..பாவம் அந்த தம்பதியர் ..இவன் வெளிய வந்து இனி சும்மா இருப்பானா இனி இவன் ஆட்டத்தை அனுமதி தந்தவர முகம் சுளிக்க வைக்காமல் இருக்க போறது ல்லை..


rama adhavan
ஜூன் 25, 2024 21:02

பணம் ஜாமீன் உட்பட பத்தும் செய்யும். ஆனால் இறந்தவர்கள் ஆன்மாவின் சாபம் இந்த குற்றம் செய்தவனை காலம் முழுதும் வதைக்கும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை