உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போலீஸ் ஸ்டேஷன்களில் அனைத்து அறையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த கோர்ட் உத்தரவு

போலீஸ் ஸ்டேஷன்களில் அனைத்து அறையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த கோர்ட் உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மனித உரிமை மீறலைத் தடுக்க மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் அனைத்து அறைகளிலும் மூன்று மாதங்களுக்குள் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுமடா போலீசார், கடந்த ஆண்டு செப்டம்பரில் லாரி டிரைவரான அகிலேஷ் பாண்டியாவிடம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

சித்ரவதை

பணம் தர அவர் மறுத்ததை அடுத்து, அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்ற போலீசார், சிசிடிவி கேமரா இல்லாத அறைக்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கி சித்ரவதை செய்தனர். இதில், அவர் படுகாயம் அடைந்தார். தவறு எதுவும் செய்யாத நிலையில், போலீஸ் ஸ்டேஷனில் சித்ரவதை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய பிரதேச உயர் நீதிமன்ற ஜபல்பூர் கிளையில் அகிலேஷ் மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு விசாரணை நிறைவுபெற்ற நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

நீதிபதி அளித்த தீர்ப்பு:

மனுதாரரான அகிலேஷ் அளித்த விபரங்களின்படி, போலீஸ் ஸ்டேஷனில் அவர் தாக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டது உறுதியாகிறது.இதற்காக வேண்டுமென்றே அவர் சிசிடிவி கேமராக்கள் இல்லாத அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். தாக்குதலை மறைக்க போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்ததும் தெரியவந்துள்ளது.

ஆடியோ வசதி

போலீஸ் ஸ்டேஷனில் மனித உரிமைகள் மீறப்படுவது கவலை அளிக்கிறது. இந்த விவகாரத்தில், அகிலேஷை தாக்கிய போலீஸ் அதிகாரி 1.20 லட்சம் ரூபாயை இழப்பீடாக ஒரு மாதத்துக்குள் அவருக்கு வழங்க வேண்டும்.இது போன்ற சம்பவங்களைத் தடுக்க, மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் அனைத்து அறைகளிலும் ஆடியோ வசதியுடன் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள் படிப்படியாக இதை செயல்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் சிசிடிவி கேமரா இல்லாத அறைகள் இருப்பது கண்டறியப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
அக் 26, 2024 12:19

இது என்ன தலைப்பு வேறு படத்தில் சர்ச் படம்.


Sundar R
அக் 26, 2024 09:42

தமிழகத்தில் ஒவ்வொரு வீட்டின் உள்ளே சிசிடிவி வைத்து மக்கள் பணத்தை திராவிடர்கள் கொள்ளையடித்து பெரிய அளவில் கார்ப்பரேட் கம்பெனிகளை நடத்துவதை கண்காணித்து தடுக்கலாம்.


Kanns
அக் 26, 2024 09:00

Good & Required Judgement by a Bold- Unbiased Judge Despite Rulers-Police Pressures


Praveen
அக் 26, 2024 08:29

கேமராவை அணைக்காமல் இருந்தால் தான் எளியவர்களுக்கு நீதி கிடைக்கும்


Kasimani Baskaran
அக் 26, 2024 06:53

எல்லா மாநிலங்களிலும் இது போன்ற நடைமுறை பின்பற்றப்பட்டால் மட்டுமே அது சரியான நடவடிக்கையாக இருக்கும்.


Mani . V
அக் 26, 2024 06:16

ஆனா, அது வேலை செய்யணுமுன்னு கட்டாயம் இல்லை. விதிமீறல் செய்ய இருக்கும் எங்களுக்கு அதன் மின் இணைப்பை துண்டிக்கத் தெரியாதா?


Ms Mahadevan Mahadevan
அக் 26, 2024 05:54

தமிழ்நாட்டிலும் இந்த உத்தரவு அமுல் படுத பட வேண்டும். காவல் துறைனரால் எளிய சாமானிய மக்கள் படும் அவஸ்தைகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை