உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு

டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இடைக்கால ஜாமினை நீட்டிக்க கோரி கெஜ்ரிவால், தொடர்ந்த மனுவை டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூன் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.டில்லி அரசின் மதுபான கொள்கை ஊழலில் தொடர்புடைய பண மோசடி வழக்கில், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டார். ஒரு மாதத்துக்கும் மேல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1 வரை இடைக்கால ஜாமின் வழங்கி இருந்தது. இதையடுத்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் முடிவடைந்ததை அடுத்து, கெஜ்ரிவால் ஜூன் 2ம் தேதி திஹார் சிறையில் சரணடைந்தார். இதற்கிடையே, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால், இடைக்கால ஜாமினை மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கும்படி, சிறப்பு நீதிமன்றத்தில், கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்தார்.

தள்ளுபடி

இந்த மனு இன்று (ஜூன் 05) விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் ஜூன் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கெஜ்ரிவால் கனவு வீண்

லோக்சபா தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நான் சிறையில் இருந்து வீடு திரும்புவேன் என கெஜ்ரிவால் மூச்சுக்கு 300 தடவை கூறி வந்தார். ஆனால் தே.ஜ., கூட்டணி 291 தொகுதிகளில் வெற்றி பெற்று, கெஜ்ரிவாலின் கனவை பொய்யாக்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Srivatsan
ஜூன் 06, 2024 07:42

ஊழல் பெருச்சாளி எல்லாம் ஆட்சியில் uttkarudhunga.


Narayanan
ஜூன் 06, 2024 07:05

உண்மை என்றும் ஜெயிக்கும்


Easwar Kamal
ஜூன் 05, 2024 22:39

கொஞ்சம் பொறுமையா இருங்கோண. தன்னால வெளியில வந்துருவாங்க. இனி தன இருக்கையை பாதுகாத்துலாவே நேரம் செரியா இருக்கும் இதுல உங்க கேஸ் எல்லாம் ஏமாத்தரம்.


sankaranarayanan
ஜூன் 05, 2024 20:45

சிறையில் இருப்பவர்களுக்கு முன் ஜாமீன் கொடுப்பதன் விளைவு இதுதான் பிறகு அவர்களை கட்டுப்படுத்தவே முடியாது அவர்கள் நீதிமன்றங்களால் அனுமதிக்காப்பட்ட குற்றவாளிகளாகவே வலம்வந்து மேலும் மேலும் குற்றங்கள் புரிய தூண்டப்படுகிறார்கள்


Ramesh Sargam
ஜூன் 05, 2024 19:52

சிறையில் இருந்தாலும் இவர் அடங்கமாட்டார். இவரை வேறுவிதத்தில் கவனிக்கவேண்டும்.


Indhuindian
ஜூன் 05, 2024 19:37

வெளியிலேயே விடாதீங்க இருக்கற மத்த ஊழல் பேர்வழிகளையும் கொஞ்சம் கூட தயவு தாட்சண்யம் பாக்காம அரசியல் நிர்பந்தத்துக்கு உட்படாமல் புடிச்சு உள்ளேபோட்டு கேஸுங்களை சீக்கிரமா ஜவ்வு மாதிதிரி இழுக்காம சட்டு புட்டுன்னு முடியுங்க அப்பதான் நீங்க நேர்மையான கூட்டணின்னு நம்புங்க ஆதரிப்பாங்க


PalayVenkat
ஜூன் 05, 2024 19:35

ஆடு பட்டியில் இருக்கும் போதே மூளைக்கறி எனக்கு தான், என்று கூறுகிறார்


Kumar
ஜூன் 05, 2024 18:41

ஊழலின் தியாகமே


Narayanan
ஜூன் 06, 2024 07:07

ஊழல் எய்திருந்தால் நிருபிக்க படவேண்டும் ஏன் இன்னும் நிறுபிக்க படவில்லை இது ஊழல் அல்ல சர்வதிகாரம் அதுக்கு தான் அயோத்தியில் ராமர் சரியான தண்டனை கொடுத்து இருக்கிறார்


karupanasamy
ஜூன் 05, 2024 18:33

கூட்டாளி ...


Lion Drsekar
ஜூன் 05, 2024 16:44

இந்த ஆண்டின் சிறந்த ... இதுதான் . சிரித்து வாழவேண்டும் . வந்தே மாதரம்


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை